
Diwali Holidays | திருப்பூர் பனியன் நிறுவனங்கள் 9 நாட்கள் தீபாவளி விடுமுறை அறிவித்துள்ளன, 10 லட்சம் தொழிலாளர்கள் உற்சாகமாக சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

திருப்பூர்
தீபாவளி பண்டிகையையொட்டி, திருப்பூர் பனியன் நிறுவனங்கள் 9 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளன.
திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களையும், வட மாநிலங்களையும் சேர்ந்தவர்கள்.
எனவே, தீபாவளியையொட்டி தொழிலாளர்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், பண்டிகையைக் கொண்டாட பலர் சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், தொழிலாளர்கள் திரும்பிவர தாமதமாகும் என்பதால், பனியன் நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து 9 நாட்களுக்கு தீபாவளி விடுமுறை அறிவித்துள்ளன.
இதனால், 18ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் பணியாற்றும தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தொழிலாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிக பணி ஆர்டர்களைப் பெற்றுள்ள நிறுவனங்கள் மட்டும் புதன்கிழமை முதல் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.