
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி, இதுவரை அதிக பேர் பார்த்த பெண்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டியாக அதிகாரப்பூர்வமாக மாறியுள்ளது என ஐசிசி தெரிவித்துள்ளது.
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி, இதுவரை அதிக பேர் பார்த்த பெண்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டியாக அதிகாரப்பூர்வமாக மாறியுள்ளது என ஐசிசி தெரிவித்துள்ளது.
8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை மற்றும் இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 247 ரன்களை எடுத்தது. எனினும், பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 43 ஓவர்களிலேயே 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டி தற்போது சாதனைப் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.

இந்தியா
2025 அக்டோபரில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி, இதுவரை அதிக பேர் பார்த்த பெண்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டியாக அதிகாரப்பூர்வமாக மாறியுள்ளது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி பார்வையாளர்களின் அடிப்படையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக மதிப்பீடு பெற்ற லீக் நிலை போட்டியாக மாறியுள்ளது. குறிப்பாக பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் மோதலை மட்டும் இணையதள செயலி வழியாக 7 கோடியே 20 லட்சம் பேர் பார்த்து இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜியோ சினிமாவில் 4.8 மில்லியன் உச்ச ஒரேநேரத்தில் பார்வையாளர்களைப் பதிவுசெய்துள்ளது, இது பெண்கள் கிரிக்கெட்டுக்கான மற்றொரு வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. இலங்கை, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் போட்டிகள் உட்பட முதல் 11 போட்டிகள் 72 மில்லியனை எட்டியுள்ளன. இது முந்தைய பதிப்பைவிட 166 சதவீதம் அதிகரித்துள்ளது. பார்வை நிமிடங்கள் 327 சதவீதம் அதிகரித்து 6.3 பில்லியனாக உயர்ந்துள்ளது.