பட செட்களில் நம்முடையது சூப்பர்ஹிட் காமினேஷன் என ஸ்ரீலீலாவிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன். கண்டிப்பாக ஹிட்டாகும். இந்தப் படத்தின் மூலம் ஒரு மாஸான ஸ்ரீலீலாவை பார்க்க இருக்கிறீர்கள்.
ரவிதேஜா நடித்துள்ள `மாஸ் ஜாதரா’ படம் நவம்பர் 1ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று இரவு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேச்சை துவங்கிய ரவி தேஜா “இந்தப் படத்தில் ஷிவடு என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார் நவீன், இவர் இப்படி கூட நடிப்பாரா என ஆச்சரியப்படுவீர்கள். இந்தப் படம் இவரை அடுத்த லெவலுக்கு அழைத்து செல்லும். என் அண்ணன் ராஜேந்திர பிரசாத், இதில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுவரை நாங்கள் சில படங்களில்தான் இணைந்து படித்திருக்கிறோம். அதில் முக்கியமான படமாக இது இருக்கும். பட செட்களில் நம்முடையது சூப்பர்ஹிட் காமினேஷன் என ஸ்ரீலீலாவிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன். கண்டிப்பாக ஹிட்டாகும். இந்தப் படத்தின் மூலம் ஒரு மாஸான ஸ்ரீலீலாவை பார்க்க இருக்கிறீர்கள்.
பானு இந்தப் படத்தில் மாஸ் செய்திருக்கிறார். இன்னும் அவரிடம் பல விஷயங்கள் உள்ளன விரைவில் நீங்கள் பார்ப்பீர்கள். ஒரு சிறப்பான இயக்குநர் நமக்கு கிடைத்திருக்கிறார். தம்பிகளே உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். எனது முந்தைய படங்களில் உங்களுக்கு ஏமாற்றம் வந்திருக்கலாம். ஆனால் இந்தப் படத்தில் அப்படி எதுவும் நடக்காது. இது என்னுடைய வாக்கு.
இன்று நம்முடைய சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, நான் மிகவும் நேசிக்கிற சூர்யாவுக்கு நன்றி. அவருடைய தம்பி கார்த்தியை அதிகம் சந்தித்திருக்கிறேன். இவரை பல ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கிறேன். இப்போது பார்க்கும் போது கூட நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டே இருப்பதை போன்ற உணர்வே வருகிறது. இங்கு வந்ததற்கு நன்றி. இவரைப் பற்றி நான் என்ன சொல்ல, அவரைப் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. நன்றி சூர்யா” என்றார்.
