உலகளாவிய பணியாளர் குறைப்பின் ஒரு பகுதியாக, இந்தியாவில் 800 முதல் 1,000 வரையிலான நிறுவன ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அமேசான் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Summary
உலகளாவிய பணியாளர் குறைப்பின் ஒரு பகுதியாக, இந்தியாவில் 800 முதல் 1,000 வரையிலான நிறுவன ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அமேசான் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இணைய வர்த்தக உலகில் முன்னணி நிறுவனமாக இருக்கும் அமேசான், கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு, தனது பணியாளர்களைத் தொடர்ந்து பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போதும் இந்தியாவில் 800 முதல் 1,000 வரையிலான நிறுவன ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகளாவிய 14,000 பணியிடக் குறைப்பின் ஒரு பகுதியாக, இந்தியாவில் 800 முதல் 1,000 நிறுவன ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளது.

amazon
செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதிலும் AI உந்துதல் தீர்வுகளை நோக்கி நகர்வதிலும் கவனம் செலுத்துகிறது. செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல், செலவுகளைக் குறைத்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயல்திறனில் கவனம் செலுத்துவதற்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது, நிதி, சந்தைப்படுத்தல், மனிதவளம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உள்ள ஊழியர்களைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டில் சுமார் 500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சமீபத்திய ஆட்குறைப்பு, அமேசானின் இரண்டாவது பெரிய பணியாளர் குறைப்பைக் குறிக்கிறது. இது உலகளாவிய வேலை குறைப்பின் ஒரு பகுதியாக 9,000 பணியிடங்களைப் பாதிக்கிறது.
தற்போதைய வேலை இழப்புகள், AI தலைமையிலான ஆட்டோமேஷன் மற்றும் முன்கணிப்பு பகுப்பாய்வுகளில் அமேசானின் பெரிய போட்டியைப் பிரதிபலிக்கின்றன என்று தொழில்துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மறுபுறம், வேலை இழப்புகள் இருந்தபோதிலும், அமேசானின் இந்திய செயல்பாடுகள் லாபத்தில் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன.
