கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஒருகிராம் தங்கத்தின் விலை ரூ.135 உயர்ந்து 11 ஆயிரத்து 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 1080 ரூபாய் உயர்ந்து 89 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம்
கடந்த சில மாதங்களாக தொடர் ஏற்றத்தில் இருந்த தங்கம், கடந்த சில தினங்களாக சற்று சரியத் தொடங்கியது. கடந்த 10 நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 9 ஆயிரம் ரூபாய் வரை குறைந்திருந்தது. தங்கம் விலை உச்சம் தொட்ட நிலையில், அதன் மூலம் லாபம் ஈட்டுவதற்காக முதலீட்டாளர்கள் தங்கள் வசமுள்ள தங்கத்தை விற்கத் தொடங்கினர். முதலீட்டாளர்கள் லாபம் ஈட்ட தங்கத்தை விற்கும்போது, சர்வதேச சந்தையில் அதன் விலை குறைவது வழக்கம் என நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். அதேபோல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே இரு தரப்பு வர்த்தக உறவு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதும் தங்கம் விலை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்திருக்கிறது. ஒருகிராம் தங்கத்தின் விலை ரூ.135 உயர்ந்து 11 ஆயிரத்து 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 1080 ரூபாய் உயர்ந்து 89 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து 166 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்திருக்கிறது.
