
முகத்தில் ஒரு பரு தோன்றினால் அதை உடனே உடைத்து விட வேண்டும் என்றே பலரும் நினைப்பார்கள். ஆனால், முகத்தில் “மரண முக்கோணம்” (Danger Triangle of the Face) எனப்படும் நெற்றிப் பொட்டு. மூக்கு பகுதியில் பரு தோன்றினால் அது ஆபத்தான விளைவுகளைக் ஏற்படுத்தக்கூடும் என்று பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் அந்தோனி யூன் எச்சரித்துள்ளார்.
முகத்தின் “மரண முக்கோணம்” என்று அழைக்கப்படும் பகுதியில் பரு தோன்றினால், அதனை உடைக்க வேண்டாம் என்றும், உடைத்தால் பெரிய அளவில் அபாயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் எச்சரித்துள்ளார்.
மரண முக்கோணம் என்பது என்ன?
இதுபற்றி டாக்டர் யூன் விளக்குவதாவது, “மரண முக்கோணம் என்பது முகத்தில் நமது மூக்கின் மேல் பகுதியிலிருந்து தொடங்கி, மேல் உதட்டின் நடுப்பகுதி வரை நீளும் பகுதியாகும். இந்த மண்டலத்தில் உள்ள நரம்புகள் நேரடியாக மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன.” அதாவது, இந்தப் பகுதியில் எந்த தொற்று ஏற்பட்டாலும், அது முகத்தின் இரத்த நாளங்கள் வழியாக மூளைக்கு நேரடியாகப் பரவக்கூடும். இதனால், வலிப்பு, காய்ச்சல், முகம் செயலிழந்து போதல், ஏன் சில நேரங்களில் மரணம் ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது.
ஒரு உண்மைக் கதை: பருவிலிருந்து மருத்துவமனை வரை:
டாக்டர் யூன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு வீடியோவில், ஒரு நபர் தனது புருவங்களுக்கு இடையில் ஒரு சிறிய பருவை உடைக்க முயன்றார். ஆனால், சில மணி நேரங்களிலேயே அவரது முகம் வீங்கி, அவருக்கு வலிப்பு வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் அவரது உயிரைக் காப்பாற்றினாலும், அவரது முகத்தின் ஒரு பகுதி நிரந்தரமாக செயலிழந்தது.
“இந்தப் பகுதி தான் மரண முக்கோணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் உள்ள நரம்புகள் மூளையுடன் நேரடியாக இணைந்துள்ளதால், முகத்தில் தொற்று வேகமாகப் பரவுகிறது” என்று டாக்டர் யூன் கூறுகிறார்.
.