
இன்று வெள்ளிக்கிழமை இந்த நிலை என்றால், நாளை சனிக்கிழமை விமானக் கட்டணங்கள் மேலும் உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் 20 மற்றும் 21 ஆகிய இரு தினங்கள் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊர்களில் குடும்பத்துடன் கொண்டாடுவதற்காகச் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இன்று (அக்.17) முதல் வெளியூர் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்த வெகுஜனப் பயணத்தால், சென்னை உள்நாட்டு விமான நிலையங்களில் விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு, அதாவது 5 முதல் 6 மடங்கு வரை, ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளன. இதனால் விமானப் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தீபாவளிப் பண்டிகைக்காகச் சொந்த ஊர் செல்லும் மக்கள் ரயில், அரசு சிறப்புப் பேருந்துகள், மற்றும் கார்கள் மூலம் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். இதற்காக ரயில்வே மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு ரயில்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.