
சென்னை மாநகரப் பகுதிகளில் தேவையற்ற மரச்சாமான்கள், துணிகள் மற்றும் மின்னணு கழிவுகளை அகற்ற மாநகராட்சி புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
சென்னை மாநகரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களது வீடுகளில் தேங்கிக் கிடக்கும் பயன்படுத்த முடியாத அல்லது தேவையற்ற பழைய பொருட்களைச் சேகரித்து அகற்றுவதற்காக, சென்னை மாநகராட்சி ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவையின் மூலம், பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள பழைய சோபா, படுக்கைகள் உள்ளிட்ட மரச்சாமான்கள், துணிகள் மற்றும் பழைய மின்னணுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அகற்ற முடியும். இந்தச் சேவை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மட்டுமே வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.