
ஒரு வீட்டை வாங்க வேண்டுமா? அல்லது வாடகை வீட்டிலேயே வசிக்கலாமா? என்பதை முடிவு செய்வதற்கு முன்பு உங்களுடைய பொருளாதார எதிர்காலத்தை நீங்கள் மதிப்பீடு செய்வது அவசியம்.

ஒரு வீட்டை உரிமையாக்கிக்கொள்வது என்பது நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கான ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான நகரங்களில் வீடு கட்டுவதற்கான செலவுகள் நிலைபெற்று வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களும் தற்போது குறைக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக வீட்டு உரிமையாளர்கள் தாங்கள் வாங்கிய வீட்டுக் கடனுக்கான வட்டி மற்றும் முதல் தொகையை காட்டி, வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 24(b) மற்றும் 80(C)ன் கீழ் டிடக்ஷன்களை கிளைம் செய்யலாம். ஆனால் இதற்கு ஒருவர் பழைய வரி விதிப்பு முறையை தேர்வு செய்ய வேண்டும்.

வாடகைக்கு இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்: மறுபுறம் வாடகைக்கு இருக்கும்போது அதற்கான ஆரம்பகால செலவு என்பது குறைவாக இருக்கும். சொத்து வரி, பராமரிப்பு மற்றும் பதிவு கட்டணங்களை நீங்கள் தவிர்க்கலாம். அடிக்கடி ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாற்றலாகும் நபர்கள் மற்றும் ஒரே இடத்தில் நீண்ட காலத்திற்கு வாழ பிடிக்காத நபர்களுக்கு வாடகை வீடு ஏற்றதாக இருக்கும். நகரங்களில் வீடு வாங்குவதற்கான செலவுகள் அதிகமாக இருக்கும்போது அங்கு வசிப்பதற்கு வாடகை வீடு ஏற்றதாக இருக்கும்.

உங்களுடைய பொருளாதார தயார்நிலையை மதிப்பீடு செய்தல்: ஒரு வீட்டை வாங்க வேண்டுமா? அல்லது வாடகை வீட்டிலேயே வசிக்கலாமா? என்பதை முடிவு செய்வதற்கு முன்பு உங்களுடைய பொருளாதார எதிர்காலத்தை நீங்கள் மதிப்பீடு செய்வது அவசியம். ஒரு வீடு வாங்கும்போது அந்த சொத்துக்கான செலவில் 15 முதல் 20 சதவீதத்தை நீங்கள் டவுன் பேமெண்டாகவும், அடுத்தடுத்து வரும் மாதங்களில் EMIகளையும் செலுத்த வேண்டும்.

இதற்கு உங்களிடம் போதுமான பணம் இருக்கிறதா என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், வழக்கமாக ஆகக்கூடிய அன்றாட செலவுகள் மற்றும் எமர்ஜென்சி ஃபண்ட் போன்றவற்றையும் கருத்தில் எடுப்பது அவசியம். இதுவே வாடகை வீடாக இருந்தால் அட்வான்ஸ் தொகை மற்றும் ஒவ்வொரு மாதமும் நீங்கள் வாடகை செலுத்த வேண்டியதாக இருக்கும். மீதம் இருக்கக்கூடிய தொகையை நீங்கள் முதலீடு செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

சரியான முடிவை எடுத்தல்: எனவே, இறுதியாக ஒரு வீட்டை வாங்க வேண்டுமா அல்லது வாடகைக்கு எடுக்க வேண்டுமா என்ற முடிவை உங்களுடைய வேலை எந்த அளவிற்கு நிலையானது, உங்களுடைய பொருளாதார இலக்குகள், நிலைத்தன்மை மற்றும் வாழ்க்கையின் அணுகுமுறை ஆகியவற்றை கருத்தில்கொண்டு முடிவு செய்ய வேண்டும்.

உங்களிடம் ஒவ்வொரு மாதமும் நிலையான சம்பளம் இருந்து, ஒரே இடத்தில் பல வருடங்களுக்கு இருப்பதற்கு உங்களுக்கு பிடிக்கும் என்றால் நீங்கள் ஒரு வீட்டை வாங்கலாம். மறுபுறம், எப்பொழுதும் கையில் பணம் இருந்துகொண்டே இருக்க வேண்டும் மற்றும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நினைக்கும்போது மாற வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு வாடகை வீடு ஏற்றது.