
நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் நோய் என்பது இன்சுலின் எதிர்ப்பு திறன் மற்றும் ஒட்டுமொத்த உணவின் தரத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. மாவுச்சத்து அல்லாத நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடுவது பசி உணர்வை கட்டுப்படுத்தி, உடல் எடையை நிர்வகிப்பதற்கு உதவுவதோடு, கல்லீரலில் கொழுப்பு படியாமல் பார்த்துக் கொள்ளும் ஆன்டி-ஆக்சிடன்ட்களை வழங்குகிறது.

கல்லீரல் என்பது நம்முடைய உடலில் இயங்கும் முக்கியமான உள்ளுறுப்புகளில் ஒன்று. அன்றாடம் நாம் கடைபிடிக்கும் சில பழக்க வழக்கங்கள் நமது கல்லீரல் ஆரோக்கியத்தை மோசமான முறையில் பாதிக்கிறது. எனினும் சரியான உணவு எடுத்து கொள்வது மற்றும் ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்கள் நமது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஃபேட்டி லிவர் டிசீஸ் போன்ற நோய்களுக்கு எதிராகவும் பாதுகாப்பு வழங்குகிறது. ஆகையால் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில காய்கறிகளைபற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் நோய் என்பது இன்சுலின் எதிர்ப்பு திறன் மற்றும் ஒட்டுமொத்த உணவின் தரத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. மாவுச்சத்து அல்லாத நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடுவது பசி உணர்வை கட்டுப்படுத்தி, உடல் எடையை நிர்வகிப்பதற்கு உதவுவதோடு, கல்லீரலில் கொழுப்பு படியாமல் பார்த்துக் கொள்ளும் ஆன்டி-ஆக்சிடன்ட்களை வழங்குகிறது. மேலும் எந்தவிதமான மருந்துகள் இல்லாமல் கல்லீரல் இயற்கையான முறையில் தன்னை குணப்படுத்திக் கொள்வதற்கு இது அனுமதிக்கிறது. அந்த வகையில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கல்லீரல் நோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள உதவும் சில காய்கறிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சிலுவை காய்கறிகள்:ப்ராக்கோலி மற்றும் காலிஃபிளவர் குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து கொண்ட சிலுவை காய்கறிகள். இந்த காய்கறிகளில் குளுக்கோ சைனோலேட்டுகள் காணப்படுகிறது. இது நம்முடைய உடலில் ஐசோதையோசயனேட்டுகளாக மாற்றப்படுகிறது. இந்த காம்பவுண்டுகள் கல்லீரல் கொழுப்பு மற்றும் வீக்கத்தோடு தொடர்புடைய ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் மெட்டபாலிசம் விளைவுகளை தருவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ப்ராக்கோலி அல்லது காலிஃபிளவர் போன்ற சிலுவை காய்கறிகளை நீங்கள் குறைந்த எண்ணெய் பயன்படுத்தி வறுத்தோ அல்லது பொரியலாக செய்தோ அல்லது ஆவியில் வேகவைத்து சூப்பாகவோ பருகலாம்.

பச்சை இலை காய்கறிகள்:பச்சை இலை காய்கறிகளில் நார்ச்சத்து, ஃபோலேட், மெக்னீசியம் மற்றும் பாலிபீனால்கள் காணப்படுகிறது. கீரைகள் கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்கு உதவும் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. கீரைகளை நீங்கள் கூட்டாகவோ, பொரியலாகவோ, பருப்பு சேர்த்து கடைந்தோ அல்லது ஆம்லெட், பராத்தா போன்றவை செய்து சாப்பிடலாம்.

பீட்ரூட்: பீட்ரூட்டில் உள்ள பீட்டாலைன்கள், ஆன்ட்டி-ஆக்சிடென்ட்கள் மற்றும் உணவு நைட்ரேட்டுகள் கல்லீரலில் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் இந்த காய்கறி கல்லீரலில் உள்ள கொழுப்பு குறையும் செயல்முறையை ஊக்குவிக்கிறது. பீட்ரூட்டை எலுமிச்சையோடு சேர்த்து சாலட் ஆக சாப்பிடலாம் அல்லது பீட்ரூட், கேரட், முட்டைகோஸ் ஆகிய மூன்று காய்கறிகளையும் பொரியலாக செய்து சாப்பிடுவது நன்மை தரும்.