
மதுரை மேலூரில் அடித்துக் கொல்லப்பட்ட நரிக்குறவர் பெண்ணான சிங்கமாலுக்கு என்று மேலூர் மக்களால் கோவில் எழுப்பப்பட்டு அம்மக்களை தாயைப் போல காத்து வரும் சிறு தெய்வ கதை தான் இந்த தொகுப்பு.

மதுரையை ஏன் வரலாற்று தொன்மை மிக்க நகரம் என்று சொல்லுகிறார்கள். பாசமும்,வீரமும், பழமையும், பண்பாடும் நிறைந்த மதுரையில் திரும்பிய பக்கமெல்லாம் ஒரு தொன்மையான சிறு தெய்வ கதைகள் இருப்பதினால். அப்படி மதுரையில் எத்தனையோ தொன்மையான சிறு தெய்வ கதைகள் ஒளிந்திருப்பது, பல பேரால் அறியாத ஒன்று. அப்படிப்பட்ட ரகசிய சிறு தெய்வ கதைகளில் ஒன்று அடித்துக் கொல்லப்பட்ட நரிக்குறவர் பெண்ணின் நீதிக்கதை.

சோழ நாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க பாண்டிய நாட்டுக்கு வந்த ஒரு நரிக்குறவ குடும்ப பெண்மணி தான் பாண்டியாயி. இந்த பாண்டியாயிக்கு 6 ஆண் பிள்ளைகள் ஆனால் பெண் பிள்ளைகள் இல்லை. நாடோடி சமூகத்தில் பெண் பிள்ளைகள் பெற்றால் தான் மதிப்பு என்று சொல்வார்கள். ஆனால் பெண் பிள்ளைகள் இல்லாத காரணத்தினால் பாண்டியாயி வேண்டாத தெய்வங்கள் இல்லை, பண்ணாத பரிகாரங்களும் இல்லை. சில நாட்களுக்குப் பிறகு பாண்டிய நாட்டில் கால் எடுத்து வைத்ததனாலையோ இவளுக்கு ஒரு பெண் பிள்ளையும் பிறந்து அதற்கு சிங்கமா என்றும் பெயர் வைத்தாள்.

நரிக்குறவர் ஆகிய பாண்டியாய்க்கு பாசிமணி ஊசிமணி கோர்ப்பது என்பது கைவந்த கலை. அதனை ஊர் ஊராகச் சென்று விற்று வருவார்கள். இவர்கள் குடிசை கட்டி வாழ்வதினால் இவர்களுடைய பழக்கும்படி எங்கு சென்றாலும் பெண் பிள்ளைகள் 6:00 மணிக்குள் குடிசைக்குள் தஞ்சமடைய வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. அதேபோல் இவளுடைய சமூகத்தில் ஆண் பிள்ளைகள் தான் பெண் பிள்ளைகளை வரதட்சணை செய்து திருமணம் செய்து கொள்வார்கள். சிங்கம்மாளின் 14 வயதில் அவளுடைய அழகையும் திறமையும் பார்த்து அவளை பெண் கேட்டு வந்தவர்கள் பலர். ஆனால் பாண்டியாய்க்கு அப்பொழுது திருமணம் செய்து வைக்க மனமில்லை ஆகையால் திருமணத்தை தட்டிப் போட்டுக் கொண்டே இருந்தாள்.

ஒரு நாள் பக்கத்து ஊரு திருவிழாவில் சிங்கம்மாள் மற்றும் அவளுடைய அண்ணிகளுடன் இணைந்து கடை போட்டிருந்தனர். மூணு மணி ஆன பிறகு கடையை மூடிவிட்டு மீண்டும் தங்களுடைய ஊருக்கு திரும்பினார்கள். திரும்பும் வழியில் கருமேகங்கள் சூழ்ந்து கடுமையான மழை. இந்த மழையினால் சிங்கம்மாள் தன்னுடைய அண்ணிகளை பிரிந்து விட்டாள். அப்பொழுது அண்ணி அண்ணி என்று கத்திக்கொண்டே இருந்த சிங்கம்மாள் அவர்களை கண்டுபிடிக்காத காரணத்தினால் ஆறு மணிக்குள் நம்மளே வீட்டுக்கு சென்று விடலாம் என்று நடக்கத் தொடங்கினார்.

அப்பொழுது, அவள் நடந்து வந்த வழியில் மூன்று வாலிபர்கள் உன்னுடைய அண்ணிகள் இந்த பக்கமாக தான் சென்றார்கள் என்று ஒரு காட்டுப்பகுதிக்குள் கூட்டிச் சென்று அங்கு சிங்கம்மாளிடம் தவறாக நடந்து கொண்டார்கள். ஆனால் எப்படியோ அவர்களிடம் இருந்து உயிர் தப்பி வீட்டை வந்தடைந்தாள். ஆனால் அவள் சமூகத்தின் வழக்கும்படி ஆறு மணிக்கு வராத காரணத்தினால் பாண்டியாய் மற்றும் அண்ணன்கள் மானத்தை வாங்கி விட்டாய் என்று அடிக்க வர ஊர் பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து தடுத்து ஒரு முடிவு எடுத்தார்கள். இவளும் நடந்த கதைகளை எல்லாம் சொல்ல அதனை அவர்கள் நம்பவில்லை.

பிறகு சிங்கம்மாள் உடைய அம்மா மற்றும் அண்ணன்கள் இணைந்து ஒரு இருட்டான புதர் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு அவளுக்கு பிடித்த பலகாரங்கள் உணவுகள் என அனைத்தையும் பரிமாறி சாப்பிட சொல்ல சிங்கமாலும் அண்ணன்கள் கோபமாக இல்லை என்று பயத்தை போக்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் சாப்பிட ஆரம்பித்தாள். பிறகு பாண்டியாயி சிங்கம்மாளுக்கு பூ வைத்து மடியில் படுக்க வைத்து தட்டி கொடுத்தாள். அப்பொழுது திடீரென்று அவளுடைய அண்ணன்கள் கட்டையால் அவளை அடித்து கொன்றுவிட்டு அப்பகுதியிலேயே புதைத்து விட்டு சென்றனர்.

கொஞ்ச நாட்கள் கடந்து அந்த பகுதியில் செல்லும் பெண்கள் திடீரென்று தங்களுடைய சட்டைகளை கிழித்துக்கொண்டு தலை முடியை விரித்து போட்டு குறி சொல்வது போல் ஆட ஆரம்பித்தார்கள், நடுராத்தி எல்லாம் யாரோ தொடர்ந்து அழுவது போல் சத்தம் கேட்க தொடங்கியது இதனால் அப்பகுதி மக்கள் பயந்து கொண்டு குறிகேட்க அதற்கு அவன் இந்த நடந்த கதைகள் எல்லாம் சொன்னான்.

பிறகு சிங்கமா புதைத்த இடத்தை அவன் காட்ட அப்பகுதி மக்கள் அங்கேயே அவளுக்கு ஒரு கோவிலை எழுப்பினார்கள். அக்கோவில்தான் தற்பொழுது வரை மதுரை மேலூர் மில்கேட்டில் உள்ளது. இப்பொழுது கூட அந்த கோவிலுக்கு சென்றால் இந்தக் கதைகளை அவ்வூர் மக்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இது போக இவளை வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியம் திலிருந்து அனைத்து விதமான பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பாள் அதாவது கேட்டதை எல்லாம் அள்ளித் தருவாள். சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் இவளை காண சிங்கப்பூர் மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் தேடி வருகின்றார்கள்.

தன்னுடைய சாவிற்கு நீதி இல்லாமல் துடித்த சிங்கமாவிற்கு மதுரை மேலூர் மக்கள் கோவில் எழுப்பி தெய்வமாக வழிபட தொடங்கியதினால் சிங்கமாலும் மேலூர் மக்களுக்காக ஊர் எல்லையில் நின்று அனைவரையும் ஒரு தாயாக காத்துக் கொண்டு வருகின்றார் என்று உருக்கமாக கூறுகின்றார்கள் மேலூர் மக்கள்.