
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், முதலீட்டாளர்களிடமிருந்து பங்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பங்குகள் விலை உயர்ந்தது. ஒரு பங்கின் விலை ரூ.1,425.10 ஆக உயர்ந்து, 1% அதிகரித்தது. இந்நிறுவனம் ரூ.18,000 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்பப் பெறுகிறது, ஒரு பங்கின் விலை ரூ.1,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சந்தை விலையை விட அதிகமாகும். சில்லறை முதலீட்டாளர்களுக்காக 1.5 கோடி பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஐந்தாவது பங்கு திரும்பப் பெறும் நடவடிக்கையாகும்.
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் அதன் முதலீட்டாளர்களிடம் இருந்து பங்குகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் போது இன்ஃபோசிஸ் பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் செலுத்தினர். இதன் காரணமாக NSE சந்தையில் இன்ஃபோசிஸ் பங்கின் விலை 1 சதவிகிதத்துக்கு உயர்ந்தது. அதாவது பங்கின் விலை ரூ.1,425.10 என்ற நிலையில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்ஃபோசிஸ் நிறுவனம் ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை முதலீட்டாளர்களிடமிருந்து திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக பங்கு விலையில் இந்த உயர்வு இருக்கும் என்று சந்தை நிபுணர்கள் எதிர்பார்த்தனர். ஐந்தாவது முறையாக இன்ஃபோசிஸ் நிறுவனம் பங்குகளை திரும்ப பெறுகிறது. தற்போது திரும்ப பெறும் பங்குகளின் விலை ரூ.1,800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய சந்தை விலையிலிருந்து ரூ.276 அதிகமாகமாகும். இன்னும் பங்குகளை திரும்ப பெறுவதற்கான ரெக்கார்ட் தேதி அறிவிக்கப்படவில்லை.
இன்ஃபோசிஸ் பங்குகளை திரும்பப் பெறுதல் 2025
இன்ஃபோசிஸின் பங்குகளை திரும்பப் பெறுதல் நடவடிக்கை குறித்து பேசிய எஸ்எம்சி குளோபல் செக்யூரிட்டீஸின் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர் சீமா ஸ்ரீவாஸ்தவா, இன்ஃபோசிஸ் ஒரு பங்கிற்கு ரூ.1,800 கொடுத்து பங்குகளை முதலீட்டாளர்களிடமிருந்து வாங்குகிறது. இது தற்போதைய சந்தை விலையான ரூ.1,524.10 யை விட 18% அதிகமாகும். சுமார் ரூ.18,000 மதிப்புள்ள பங்குகளை திரும்ப பெறுகிறது. இந்த மதிப்பு அதன் சந்தை மூலதனத்தில் இருந்து 2.41% ஆகும். முக்கியமாக, ஒரு கோடியே 50 லட்சம் பங்குகள் சில்லறை பங்குதாரர்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன.பங்குகளை விற்க விரும்பு முதலீட்டாளர்கள் ரெக்கார்ட் தேதி டீமேட் கணக்கில் பங்குகளை வைத்திருக்க வேண்டும்.
இன்ஃபோசிஸ் 5வது முறையாக பங்குகளை திரும்ப பெறுகிறது
இன்ஃபோசிஸ் நிறுவனம் ஐந்தாவது முறையாக முதலீட்டாளர்களிடமிருந்து பங்குகளை திரும்ப பெறுகிறது. அதிக மதிப்பிலான பங்குகளை திரும்ப பெறுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு 2022ம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனம் பங்குகளை திரும்ப பெற்றது. அந்த சமயத்தில் ரூ. 9,300 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற்றது. அதன் அதிகபட்ச விலை ரூ. 1,850 என இருந்தது.
2017 ஆம் ஆண்டில், இன்ஃபோசிஸ் அதன் முதல் பங்கு திரும்பப் பெறுதலை அறிவித்தது. அங்கு நிறுவனம் 11.3 கோடி பங்குகளை அல்லது அதன் செலுத்தப்பட்ட பங்குப் பங்கு மூலதனத்தில் 4.92 சதவீதம் வரை ஈக்விட்டி பங்கிற்கு ரூ.1,150 விலையில் வாங்கியது. மொத்தமாக சுமார் ரூ. 13,000 கோடி ஆகும்.
அதேபோல் 2019ம் ஆண்டும் முதலீட்டாளர்களிடமிருந்து பங்குகளை வாங்கியது. அதன் மதிப்பு ரூ.8,260 கோடியாகும்.