
இன்று அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் பங்கு விலை அதன் முதலீட்டாளர்கள் முதல் சிஇஓ வரை அனைவரையும் பணக்காரரகளாக்கி உள்ளது. குறிப்பாக நிறுவனம் ஒரே நாளில் 244 பில்லியன் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.20 லட்சம் கோடிக்கும்மேல் சந்தை மூலதனத்தை எட்டியுள்ளதால், நிறுவனத்தின் தற்போதய சந்தை மூலதனம் $922 பில்லியனை எட்டி சாதனை படைத்துள்ளது. இதில் நமக்கு ஷாக்கான விஷயம் என்னவென்றால் ஆரக்கிள் நிறுவன ஒரே நாளில் ஈட்டிய சந்தை மூலதனத்தின் மதிப்பு, நம் நாட்டின் முன்னணி ஐடி ஜாம்பவான்களான டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், இன்ஃபோசிஸின் சந்தை மூலதனத்தை சேர்த்தால் கூட வராது. சரி இதற்கு காரணம் என்ன, எதனால் ஆரக்கிள் சந்தை மூலதனம் உயர்ந்தது என்பதைப் பற்றி இனி பார்க்கலாம்.
புதன்கிழமை அமெரிக்க பங்குச் சந்தையில் தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் அசாத்திய சாதனை படைத்துள்ளது. குறிப்பாக உலக கவனத்தை ஈர்த்துள்ளது என்று சொல்லலாம். ஏனெனில் நிறுவனத்தின் பங்குகள் உயர்வால், அதன் சந்தை மூலதனம் சுமார் 244 பில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.20 லட்சம் கோடி உயர்ந்து, பங்குச் சந்தை சாதனையை எட்டியுள்ளது.
நிறுவனத்தின் லாபம் உயர்ந்ததால், ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் இடத்தை முந்தியுள்ளார். பங்கு விலை உயர்வால் எப்படி இணை நிறுவனர் உலகின் பெரும் பணக்காரர் ஆனார், இதன் பின்னணி என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.
இதற்கு முக்கிய காரணம் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) தான். நிறுவனம் ஆகஸ்ட் மாதம் நான்கு பெரிய பல பில்லியன் டாலர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதன் காரணமாக அதன் கிளவுட் உள்கட்டமைப்பு வணிக வருவாய் இந்த ஆண்டு 77% உயர்ந்து 18 பில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் இரவு வர்த்தக அமர்வில் ஆரக்கிள் பங்குகள் சுமார் 36% லாபத்தை பதிவு செய்தது. இந்த வளர்ச்சி காரணமாக ஆரக்கிள் கிளவுட் உள்கட்டமைப்பு வருவாய் 2025 நிதியாண்டில் 10.3 பில்லியன் டாலரிலிருந்து 2030 நிதியாண்டில் 144 பில்லியன் டாலராக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க.. நிறுவனத்தின் ஒரு நாள் சந்தை மூலதனமான 244 பில்லியன் டாலரை கணக்கெடுத்தால், இந்தியாவின் முக்கிய பெரிய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், HCL டெக் நிறுவனங்கள் சந்தை மூலதனத்தையே தாண்டியுள்ளது. இது இன்னொரு பெரிய சாதனை என்றே கூறலாம்