வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னத்தால், தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Summary
தமிழ்நாட்டின் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 27 ஆம் தேதி மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அது புயலாகவும் வலுவடையக்கூடும் என கூறியுள்ளது.
இந்த சூழலில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

கனமழை
தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு இரு தினங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
