காவிரி பாயும் 11 மாவட்டங்களுக்கு மத்திய நீர்வள ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது..
Summary
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவிற்கு, மத்திய நீர்வள ஆணயம் பிரத்யேக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை மற்றும், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை கடலூர் உள்ளிட்ட காவிரி பாயும் 11 மாவட்டங்களுக்கு, அவ்வாணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

வைகை அணை கிட்டத்தட்ட நிரம்பியிருப்பதை சுட்டிக்காட்டி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய நீர்வள ஆணையம், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள கரையோர மக்களும், தாழ்வான பகுதிகளில் வசிப்போரும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.
