ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தன்னுடைய 33வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்து அசத்தினார்..
Summary
தானசிட்னியில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில், ரோகித் சர்மா 121* ரன்கள் அடித்து இந்தியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியடையச் செய்தார். இது அவரது 50வது சர்வதேச சதமாகும். ஆஸ்திரேலியாவில் அதிக ODI சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளிலும், சூர்யகுமார் யாதவ் தலைமையில் 5 டி20 போட்டிகளிலும் விளையாடுகிறது.
ஒருநாள் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், பெர்த் மற்றும் அடிலெய்டு மைதானங்களில் நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை எளிதாக வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

ind vs aus odi series
இந்தசூழலில் 3வது ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்றது..
2 சாதனைகள் படைத்த ரோகித் சர்மா..
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே அடித்தது. சிறப்பாக பந்துவீசிய ஹர்சித் ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்..

விராட் கோலி
237 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணியில் 13 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசிய ரோகித் சர்மா 33வது ஒருநாள் சதமடித்து அசத்தினார். இது அவருடைய 50வது சர்வதேச சதமாக பதிவுசெய்யப்பட்டது.

மறுமுனையில் கடந்த இரண்டு போட்டிகளாக 0 ரன்னில் வெளியேறிய விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் அடித்து அசத்தினார். 121* ரன்கள் குவித்த ரோகித் சர்மா இந்தியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச்சென்றார்..
ரோகித் சர்மா படைத்த 2 சாதனைகள்
1. ஆஸ்திரேலியா மண்ணில் அதிக ODI சதங்கள் (6) அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோகித் சர்மா; அவருக்கு அடுத்த இடத்தில் 5 சதங்களுடன் விராட் கோலி மற்றும் குமார் சங்ககரா நீடிக்கின்றனர்.

ரோகித் சர்மா
2. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிக ODI சதங்கள் (9) விளாசிய சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன்செய்தார் ரோகித் சர்மா. சச்சின் 70 இன்னிங்ஸ்களில் செய்த சாதனையை ரோகித் சர்மா 49 இன்னிங்ஸ்களில் அடித்து அசத்தியுள்ளார்.
