அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் மழை குறித்தான புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Summary
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கி வந்தது. இந்நிலையில், வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்போது வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை நிலவரப்படி, தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவியது எனவும், அது இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துவிட்டது. உள் தமிழகம், தெற்கு கர்நாடகா இடையே நிலை கொண்டுள்ள இந்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வானிலை ஆய்வு மையம்
அத்தோடு, தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாலும் தமிழக வட கடலோர பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதாலும், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது
இந்நிலையில்தான் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறியிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்த காற்றழுத்த தாழ்வு நிலை, ஒரு தடயமும் இல்லாமல் மறைந்து, பின்னர் வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, அந்தமான் கடல் அருகே உருவாகி வருகிறது. அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மேற்கு நோக்கி காற்று வீசக்கூடிய சாத்தியமுள்ள பகுதிகள் மேற்கு நீலகிரியின் பந்தலூர், பனிச்சரிவு போன்ற பகுதிகள், தென்மேற்கு பருவமழையின் போது மழை பெய்யும், மேலும் மேற்கு நோக்கி காற்று திரும்பும்.

மழை
கேடிசிசி மண்டலமான சென்னை மற்றும் ராணிப்பேட்டையில் இடியுடன் கூடிய மழை
அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை இருப்பதால், காற்று தற்காலிகமாக மேற்கு நோக்கி மாறியுள்ளது. எனவே கடந்த சில நாட்களாக காலை மழையைப் போலல்லாமல், நிலப்பகுதியில் இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மேற்கிலிருந்து மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளா / கர்நாடகா மற்றும் கோவா பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மிதமானது முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் எனவும் ஆனால் வெள்ளப்பெருக்கு அபாயம் எதுவும் இருக்காது எனவும், குறிப்பிட்டுள்ளார். அத்தோடு குறைந்தபட்சமாக 2.4மிமீ முதல் அதிகபட்சமாக 24 செண்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
