தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Summary
வடகடலோர தமிழ்நாட்டை ஒட்டி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது வடக்கு உள்தமிழ்நாடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நிலை கொண்டுள்ளது. இது, இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக பலவீனமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் கனமழை
அதேநேரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கனமழையை தொடர்ந்து தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக, ஆட்சியர் சதீஸ் தெரிவித்துள்ளார். இதனை ஈடு செய்யும் விதமாக, நவம்பர் 15 ஆம் தேதியை வேலை நாளாகவும் அறிவித்துள்ளார்.
