
காதி கிராப்டில் இந்தாண்டும் சிறப்பு விற்பனையாக கதர் பாலியஸ்டர் மற்றும் பட்டு ஆகிய ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் 157-வது வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியர் , ஷேக் அப்துல் ரகுமான் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார்.
கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடு ரூ.78.00 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டு, குறியீட்டு இலக்கினை முழுமையாக எய்தப்பட்டது. நடப்பாண்டு ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறியீட்டை முழுமையாக எய்திட அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சிறப்பு விற்பனையாக பனங்கற்கண்டு, சுக்கு மிளகு பால் மிக்சர் பவுடர், காதி கிராஃப்ட் சோப்பு வகைகள், அகர்பத்தி வகைகள், சாம்பிராணி, வற்றல் வகைகள், கருப்பட்டி, வெல்லம், நாட்டு சர்க்கரை, தேன் போன்ற பல பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரியும் பொதுமக்கள் மற்றும் இங்கு பணிபுரியும் அரசு ஊழியர்கள் வாங்கி பயனடைய வேண்டும் தினமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.