
மெக்சிகோவில் எரிமலை வெடித்தபோது பதிவான அரிய காட்சி வைரலாகி வருகின்றன.
Summary
மெக்சிகோவின் பாப்போ கா டெ பெட்ல் ((Popo-ca-té-petl)) எரிமலை அதிகாலையில் வெடித்தது. இந்த வெடிப்பில் எரிமலைப் பிழம்பு வானில் எழுந்த அதே நேரத்தில், அதன் அருகில் ஒளிரும் பொருள் கடந்து சென்ற அரிய காட்சி பதிவாகியுள்ளது. அது ‘விண்கல்’ ஆக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்..
இந்த எரிமலை வெடித்ததால் அதன் சாம்பல் திட்டுகள் மற்றும் வாயு தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றன.. இது எரிமலை சாம்பல் ஆலோசனை மையம் (VAAC) மற்றும் மெக்சிகோவின் பேரிடர் தடுப்புக்கான தேசிய மையம் (CENAPRED) ஆகியவற்றால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது..

பாப்போ கா டெ பெட்ல் எரிமலை
இந்நிலையில் அக்டோபர் 14ஆம் தேதி மெக்சிகோவின் பேரிடர் தடுப்புக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாப்போ கா டெ பெட்ல் எரிமலை தொடர்ச்சியாக வெடிக்கும் கட்டத்தை எட்டியுள்ளது என்றும் ஆனால் அது குறித்து எந்த பேரழிவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆனால் இது குறித்து அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது..
சில மாதங்களுக்கு முன்பாகவே பொது மக்களுக்கும் அங்கு குடியிருப்பவர்களுக்கும் இந்த எரிமலை வெடிப்பு குறித்தும் அதனால் தினமும் வெளியாக போகும் புகை மற்றும் சாம்பல் விழும் அபாயம் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது…. மேலும் அந்த பகுதிக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கையாக மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.. அதுமட்டுமல்லாமல் அந்த பள்ளத்திற்கு 12 கி.மீ.க்கு மேல் நெருங்குவதைத் தவிர்க்கவும் என அங்கு இருக்கும் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது..

பாப்போ கா டெ பெட்ல் எரிமலை வெடிப்பு
இந்த பாப்போ கா டெ பெட்ல் எரிமலை மெக்ஸிகோ நகரத்தின் தென்கிழக்கே அமைந்துள்ளது மற்றும் இப்பகுதியில் வசிக்கும் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த எரிமலை வெடிப்பால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக எரிமலை சாம்பல் மற்றும் வெடிப்பு காலங்களின் போது சுகாதாரமற்ற காற்றை சுவாசிப்பதினால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இந்த வெடிப்பில் எரிமலைப் பிழம்பு வானில் எழுந்த அதே நேரத்தில், அதன் அருகில் ஒளிரும் பொருள் ஒன்று கடந்து சென்ற அரிய காட்சி பதிவாகியுள்ளது. அது ‘விண்கல்’ ஆக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த அரிய காட்சியை தேசிய பேரிடர் தடுப்பு மையம் வெளியிட்டுள்ளது.
இதுபோலவே கடந்த 1990 களின் நடுப்பகுதியில் இந்த எரிமலை கிட்டத்தட்ட குறைந்த முதல் மிதமான வெடிப்பு செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது, அப்போதும் சாம்பல் விழுதல், புகை எழுதல் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன.. அந்த நேரங்களில் பாதுகாப்பிற்காக அதிகாரிகள் விமானப் பயணத்திற்கு தடை விதித்து மற்றும் பல முன்னெச்சரிக்கைகளை முடுக்கிவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..
தற்போது இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிகைக்களில் பெரிய வெளியேற்றங்கள் அல்லது பேரழிவுகளைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் நிலைமை அசாதரணமாக மாறும் தன்மையுடன் உள்ளது என்றும் உள்ளூர் அதிகாரிகள் தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்..