டெல்லி விமான நிலையத்தில் விமானத்திற்கு மிக அருகில் நின்றிருந்த பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Summary
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3 பகுதியில், விமானம் ஒன்றுக்கு அருகில் நின்றிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் பேருந்து ஒன்றில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது.
பேருந்தில் பயணிகள் யாரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதால், விமானச் சேவைகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா அல்லது யாருக்காவது காயம் ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
இந்த பேருந்து ஏர் இந்தியா SATS ஏர்போர்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்பட்டது. இந்த நிறுவனம் பல விமான நிறுவனங்களுக்குத் தரைவழிச் சேவைகளை வழங்கும் ஒரு மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர் ஆகும்.விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
