கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க போலி விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், விண்ணப்பம் ஒன்றிற்கு ரூ.80 வாங்கப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Summary
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் உள்ள ஆலந்த்தொகுதியில் வாக்காளர்களை நீக்கதாக்கல் செய்யப்பட்ட போலி படிவங்கள் ஒவ்வொன்றுக்கும் 80 ரூபாய் வீதம் தரப்பட்டுள்ளது என சிறப்பு புலனாய்வுக்கு ழுவால் கண்டறியப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2023 பிப்ரவரி வரை சுமார் 6 ஆயிரத்து 18 போலி விண்ணப்பங்கள் பெயர் நீக்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு மொத்தமாக டேட்டா சென்டருக்கு 4 லட்சத்து 80ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
சமர்ப்பிக்கப்பட்டவிண்ணப்பங்களில் 24 மட்டுமே உண்மையானவை என்பதும் மீதமுள்ளவை போலி என்பதும் தேர்தல் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல்
போலியானவிண்ணப்பங்களை சமர்ப்பிக்க 75 சிம்கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில் தெரியவந்துள்ளது. வாக்காளர் பட்டியில் முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியபோது ஆலந்த் தொகுதி வாக்காளர் நீக்கம் குறித்தும் எடுத்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
