
சினிமா மிகவும் சுலபமான ஒன்று என நான் நினைத்தேன். நாங்கள் ஸ்போர்ட்ஸில் எப்படி கஷ்டப்பட்டோமோ, அதேமாதிரி சினிமா துறையிலும் ரொம்ப கஷ்டப்பட்டு இந்தப்படத்தை எடுத்திருக்கிறார்கள்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், பசுபதி, அமீர், லால், ரஜிஷா, அனுபமா நடித்து வெளியாகியுள்ள படம் `பைசன்’. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் துருவ் நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் உண்மை நாயகன் மணத்தி கணேசன் தான்.
இப்படம் பார்த்த பின்பு அதனைப் பற்றி மணத்தி கணேசன் பேசிய போது “இந்தப் படத்தை (பைசன்) பார்ப்பதற்காக சென்னை வர சொல்லி இருந்தார்கள். கபடியில் என்னுடைய உழைப்பை படத்தில் இயக்குநர் அற்புதமாக கொண்டு வந்திருக்கிறார். துருவ் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார். அவர் மட்டுமில்லாது கூட நடித்த அத்தனை பேரும் சிறப்பாக நடித்திருந்தார்கள்.
சினிமா மிகவும் சுலபமான ஒன்று என நான் நினைத்தேன். நாங்கள் ஸ்போர்ட்ஸில் எப்படி கஷ்டப்பட்டோமோ, அதேமாதிரி சினிமா துறையிலும் ரொம்ப கஷ்டப்பட்டு இந்தப்படத்தை எடுத்திருக்கிறார்கள். 1994-ல் நான் விளையாடிவிட்டு வந்தப்போது என்ன மகிழ்ச்சியில் இருந்தேனோ, அதை என் தம்பி மாரி செல்வராஜ் ரொம்ப சிறப்பாக காண்பித்திருக்கிறார். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. ஸ்போர்ட்ஸ் என்றாலே சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது என இதில் காண்பித்திருக்கிறார்.

Bison
ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஜெயித்த போது எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்தேனோ, அதைவிட ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். சரித்திரத்தில் அழிக்க முடியாத ஒன்றை மாரி இன்று செய்திருக்கிறார். அவருக்கு நான் நன்றி சொல்ல முடியாது, என் உயிரிலே கலந்து இருப்பவர் அவர். துருவ் ஒருநாள்கூட முடியாதுனு சொன்னதில்ல. சற்று சோர்வானால் கூட, நீ ஸ்போர்ட்ஸ் மேன் எனக்கு அதெல்லாம் ஒன்றுமே இல்லை, எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என சொல்வேன், உடனே வந்துவிடுவார். ஒரு வருடத்திற்கு மேலாக என்னுடன் பயணித்தார்.
நாங்கள் விளையாடும் போது மண் தரையில் விளையாடினோம், இப்போது மேட் கோர்ட் (mat court) வந்துவிட்டது. கபடியில் தமிழ்நாடு டீம் சிறப்பாக இருக்கிறது. ஆனால் தெற்கில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி கபடி விளையாட்டு வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.