
இனி அந்த விஷயத்தை பண்ணமாட்டேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ள கருத்துக்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

எத்தனை கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் இனி அந்த விஷயத்தை பண்ணமாட்டேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ள கருத்துக்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

Yours Frankly Vishal என்ற பெயரில் பாட்காஸ்ட் ஒன்றை தொடங்கியுள்ள விஷால், அதன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

உதவி இயக்குநராக திரையுலகில் வாழ்வை தொடங்கி நடிகர் சங்கத் தலைவரானது வரை பல்வேறு விஷயங்களை சுவாரஸ்யத்துடன் பகிர்ந்து கொண்டார்.

பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் நடித்த அனுபவங்களை எடுத்துரைத்தார். விருதுகள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறினார்.

நடிகர் விஜய்க்காக எழுதப்பட்ட சண்டைக்கோழி படத்தில் இயக்குநர் லிங்குசாமியை அணுகி தாம் அந்த படத்தில் நடித்ததாக விஷால் தெரிவித்தார்.

இந்நிலையில், எத்தனை கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் ’அவன் இவன்’ படத்தில் நடித்த கதாபாத்திரத்தை இனி ஏற்று நடிக்க மாட்டேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.