
Bigg Boss 9: பிக் பாஸ் வீட்டில் மாஸ்க் டாஸ்க்கில் சபரி தோற்றதை கொண்டாடிய பாரு, கேப்டன்ஸி டாஸ்க்கிலும் சபரியை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார்.

Bigg Boss வீட்டின் இந்த வாரத்திற்கான டாஸ்க் அனைத்தும் முடிந்த நிலையில், வீட்டினர்கள் பெஸ்ட் மற்றும் ஓர்ஸ்ட் பெர்பாமர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
பெஸ்ட் ஆக தேர்வு செய்யப்படும் போட்டியாளர்கள் அடுத்த வார கேப்டன்சி டாஸ்கில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என பிக் பாஸ் அறிவித்தார். அதனால் சூப்பர் டீலக்ஸ் வீட்டார் இதில் உள்ளடங்க மாட்டார்கள் என தெரிவித்தார்.
மேலும், கம்ருதீன் ஏற்கனவே நேரடியாக கேப்டன்சி டாஸ்கில் தேர்வு செய்யப்பட்டிருப்பதால், அவரை இதில் சேர்க்க வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், வீட்டு உறுப்பினர்கள் தங்களது விருப்பப்படி இரண்டு போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கச் சென்றனர். இதில் அதிக ஓட்டுகளைப் பெற்ற கனி மற்றும் சபரி ஆகியோர் பெஸ்ட் பெர்பாமர்களாகவும், அதேபோல் ஆதிரை மற்றும் அரோரா ஓர்ஸ்ட் பெர்பாமர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
வொர்ஸ்ட் பெர்பார்மர் தேர்வு செய்யும் போது அரோராவை குறிப்பிட்ட கெமி ”ப்ரிட்டி பிரிவிலேஜ்” எடுத்துக் கொள்வதாக கூறினார். இதனால் அரோராவின் முகம் அங்கேயே வாடி போனது. பின்னர் பாரு இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரோராவை மண்டையைக் கழுவி கொண்டிருந்தார்.
ஏற்கனவே அரோராவால் துஷார் தன் கடமைகளிலிருந்து நழுவி தன் பதவியையும் இழந்த நிலையில் அவர் மீது ரசிகர்களும் விரக்தியில் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் உள்ளவர்களும் அரோராவின் கேமை புரிந்திருப்பது இந்த டாஸ்க் மூலம் தெரியவந்துள்ளது.
இது முடிந்ததும், வீட்டில் கதை சொல்லும் டாஸ்க் தொடங்கியது. இதில் கம்ருதீன் மற்றும் அப்சரா தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கம்ருதீன் தனது சிறுவயது சோகங்களையும், குடும்பத்தில் எதிர்கொண்ட துன்பங்களையும் உருக்கமாகச் சொன்னார். “எனக்கு அப்பா பாசம் கிடைக்கவில்லை. என் அம்மா தான் என்னை வளர்த்தார். சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டேன். அப்பா ஒரு முறை அம்மாவை காயப்படுத்த முயன்றார்” என கம்ருதீன் கூறினார்.
மேலும், தனது காதல் வாழ்க்கையையும் பகிர்ந்த கம்ருதீன், “ஐந்து வருடம் ஒருவரை காதலித்தேன், ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக பிரிந்தோம். பின்னர் சீரியலில் எனது இணை நடிகையுடன் நெருக்கம் ஏற்பட்டது. ஆனால் ப்ரொபஷனல் காரணமாக அதுவும் முடியவில்லை” என்று உணர்ச்சியோடு வெளிப்படுத்தினார். சண்டைக்கு வரிந்து கட்டி நிற்கும் ரக்கடான ஆளாக பார்த்த கம்ருதீனை கண் கலங்கிய நிலையில் பார்த்த ஹவுஸ்மேட்ஸும், ரசிகர்களுமே சோகமடைந்தனர்.
அடுத்து அப்சரா தனது வாழ்க்கை கதையை வெளிப்படையாக கூறினார். “நான் ஒரு திருநங்கை. சிறுவயதில் இதை உணர்ந்தபோது மிகவும் பயந்தேன். ஆனால் என் குடும்பத்திடம் சொன்னபோது, என் அண்ணன் என்னை கட்டி அணைத்தார், அம்மாவும் முழுமையாக என்னை ஏற்றுக் கொண்டார்” என்றார்.
பல இடங்களில் இவ்வாறு திருநங்கையை நிராகரிப்பதை, நாம் பார்த்திருப்போம் ஆனால் திருநங்கையாக மாறுவதை இவர் வீட்டில் ஏற்றுக் கொண்டதால் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர். மேலும், “எனது ஆபரேஷனுக்காக தாய்லாந்து சென்றேன், அதற்கான செலவுகளை என் குடும்பமே ஏற்றுக்கொண்டது என தெரிவித்தார். அவரது தாயான சாகுலின் மேரி அவர்களுக்கும் வீட்டில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர்.
அதன் பிறகு அடுத்த வார வீட்டு தல தேர்வு செய்யும் “குத்துங்க எஜமான் குத்துங்க” டாஸ்க் தொடங்கப்பட்டது. இதில் கம்ருதீன், கனி மற்றும் சபரியின் உருவ பொம்மைகள் லிவிங் ஏரியாவில் வைக்கப்பட்டிருந்தன. அருகே ஒன்பது கத்திகள் வைக்கப்பட்டு, யார் வேண்டுமானாலும் கத்தியை போட்டியாளர்கள் பார்க்காதபடி குத்தலாம் என விதிமுறைகள் கூறப்பட்டன.
மூன்று கத்தி குத்துகள் பெற்றவர் டாஸ்கிலிருந்து நீக்கப்படுவார், குறைவான கத்திகள் பெற்றவர் அடுத்த வார தலைவராக தேர்வு செய்யப்படுவார். டாஸ்க் தொடங்கியதும் ரம்யா முதலில் கம்ருதீனின் உருவ பொம்மையை கத்தியால் குத்தினார். இதனால் இருவருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கம்ருதீன், “சம்பந்தமே இல்லாமல் கம்ருதீன் அண்ணா உங்களை பிடிக்கும் என்று சொன்ன பாத்தியா” என்று கூறினார். அதற்கு ரம்யா “நேற்று வரை உங்களை பிடித்தது, இன்று காலையில் என்னை ஓர்ஸ்ட் பெர்பாமராக சொன்னதிலிருந்து பிடிக்கலை. அண்ணன் கூப்பிட்டதற்கு என் செருப்பை எடுத்து என்னை நானே அடித்துக் கொள்ள வேண்டும்” என ரம்யா கூற, இருவருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாதம் நடந்து கொண்டிருக்கும் போதே பார்வதி சபரியின் படத்தை கத்தியால் குத்தினார். ஆனால் அதனை சபரி பார்த்து விட்டதால், அந்த கத்தியை எடுக்குமாறு பிக் பாஸ் கூறினார். அடுத்தது அரோரா சபரியின் உருவ பொம்மையை கத்தியால் குத்தினார்.
இதற்கிடையில் கலையரசன் அனைவரையும் டாஸ்கிற்காக டைனிங் ஏரியா அழைக்கின்றார். அந்த நேரத்தை பயன்படுத்தி, சுபிக்ஷா கம்ருதீனின் உருவத்தை குத்தியதும், கம்ருதீன் அதனை எதிர்த்து “முதுகுல குத்துற மாதிரி நடக்குது” என விமர்சித்தார். ஆனால் சுபிக்ஷா அமைதியாக இருந்தார். அதற்குப் பிறகு ஆதிரையும் கம்ருதீனை குத்தியதால், கம்ருதீன் டாஸ்கிலிருந்து நீக்கப்பட்டார்.
அடுத்தபடியாக சபரி, கனி உருவத்தை கத்தியால் குத்தினார். அதனை தொடர்ந்து பிரவீனும் கனி உருவத்தை கத்தியால் குத்தினார். ராம்ப்வாக் டாஸ்க் நடைபெற்றதால் வீட்டுத் தல டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த டாஸ்கில் பிரவீன் மற்றும் அப்சரா நடுவராக இருந்தனர்.
முடிவாக ராம்ப்வாக் டாஸ்கில் FJ மற்றும் ஆதிரை ஜோடி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றனர். இவ்வாறு இந்த வார பிக் பாஸ் நிகழ்வுகள் உணர்ச்சிகள், வாக்குவாதங்கள், சவால்கள் என கலந்திருந்தன.
கேப்டன்சி டாஸ்கில் யார் வெற்றி பெறப்போகிறார்கள். வீக்கெண்ட் எபிஸோடில் விஜய் சேதுபதி வருவதால் இன்றைய எபிஸோடை பார்வையாளர்கள் மிக எதிர்பார்போடு காத்திருக்கின்றனர்.