
விஜய் தலைமையில் ஒரு புதிய கூட்டணி அமையும் என அமமுக பொதுச்செயலாலர் டி.டிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் கோவில் அருகே உள்ள தனியார் அரங்கில், செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கான அமமுக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

டிடிவி தினகரன்
அப்போது, ”தேர்தல் நேரத்தில் நாங்கள் மற்றவர்களுடன் கூட்டணியில் இருப்போமா அல்லது எங்களது தலைமையில் ஒரு கூட்டணி அமையுமா என்பது விரைவில் உங்களுக்கு தெரிய வரும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திரும்பத் திரும்ப விஜயை கூட்டணிக்கு அழைப்பதைப் பார்த்தால், தங்களால் தனித்து நிற்க முடியாது என்பதால் விஜய் அவருக்கு கூட்டணி அழைப்பு விடுத்து வருகிறார் என்ற எண்ணம் தோன்றுகிறது.
தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமைவும் வாய்ப்புள்ளதாக தான் தெரிகிறது. தமிழ்நாட்டில் நான்கு முணை கூட்டணி அமையும், எதிர்பாராத வகையில் கூட்டணியும் அமையவும் வாய்ப்பு உள்ளது” என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”தமிழ்நாட்டில் கல்வி வளர்ந்து இருந்தாலும் பெரியார் போன்ற தலைவர்களின் எண்ணங்கள் தமிழ்நாட்டிலே நிறைவேற்றப்பட்டு வந்தாலும, இதுபோன்ற ஆணவப் படுகொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு எதிராக நீதிபதி தலைமையில் விசாரணை அமைத்து சட்டம் இயற்றப்படுவது வரவேற்கதக்கது.
மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்குள் திமுக அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு. நிறைவேற்றினால் மட்டும் தான் வருகின்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக மக்களை சந்திக்க முடியும்” எனவும் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.