
தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதி செய்ததாக பிஹாரை சேர்ந்த நபர் செங்கல்பட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்..
Summary
செங்கல்பட்டில் கைதான பிஹாரை சேர்ந்த நபர் மீது, தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக என்.ஐ.ஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்துள்ளது.
செங்கல்பட்டில் கட்டடவேலையில் ஈடுபட்டிருந்த பிஹாரை சேர்ந்த முகமது அக்லாக் முஜாஹித் என்பவரை, தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் இதுதொடர்பான வழக்கை விசாரித்த என்.ஐ.ஏ, அவர் மீது என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், முகமது அக்லாக் முஜாஹித் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும், தமிழ்நாடு மற்றும் ஜம்மு காஷ்மீரில் தாக்குல் நடத்த சதி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக அவர், ஆயுதங்களை கொள்முதல் செய்ய முயற்சித்ததாகவும் கூறப்பட்டுள்ள