
பிஹார் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் காலக்கெடு முடிந்தபோதும் காங்கிரஸ் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்துவருகிறது.
Summary
243 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய பிகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகக் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி என மும்முனைப் போட்டி நிலவுவதால் களம் சூடுபிடித்திருக்கிறது.

பிஹார் தேர்தல் ஏன் முக்கியம்
முதல்வர் நிதிஷ்குமாருடன் கைக்கோர்த்துள்ள பாஜகவுக்கு அக்கூட்டணியில் 101 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு சுமூகமாக முடிவடைந்த நிலையில், வேட்புமனு தாக்கல் காலக்கெடு முடிந்தபோதும் மகாகத்பந்தன் கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்துவருகிறது..
பிஹார் தேர்தலில் முதற்கட்ட வேட்புமனுதாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்த பின்னரும்கூட, தொகுதி பங்கீடுசெய்வதில் இந்தியா கூட்டணி தலைவர்களிடையே இழுபறி நீடித்துவருகிறது. இரு கட்டங்களாக நடைபெறவுள்ள பிஹார் சட்டமன்றத்தேர்தலின் முதற்கட்டத்திற்கான வேட்புமனு தாக்கல் காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்துள்ளது.

தேஜஸ்வி யாதவ்
இருப்பினும், எந்தக்கட்சி எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பதை தீர்மானிக்க முடியாமல், காங்கிரஸ் – ராஷ்ட்ரியஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகூட்டணியினர் திணறி வருகின்றனர்.இதனால், காங்கிரஸ், ஆர்ஜேடி, சிபிஐ-எம்எல் போன்ற கூட்டணி கட்சிகள் ஒரேதொகுதிகளில் தங்களுக்கான வேட்பாளர்களை போட்டிப்போட்டுக்கொண்டு நிறுத்தியுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.