
Gold and silver price | இன்றைய (அக்டோபர் 18) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.

நாளுக்கு நாள் சாமானிய மக்களின் ஆசை பட்டியலில் இருந்தே வெளியேறும் நிலைக்கு தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

ஒரு சவரன் ஒரு லட்சத்தை எட்டும் நிலைக்கு சென்று கொண்டிருப்பதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அந்த வகையில் நேற்று அக்டோபர் 17ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,200க்கும், சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.97,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி இன்று அக்டோபர் 18ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.250 குறைந்து ஒரு கிராம் ரூ.11,950க்கும், சவரனுக்கு ரூ.2,000 குறைந்து, ஒரு சவரன் ரூ.95,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல, 18 காரட் தங்கம் விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.240 குறைந்து ஒரு கிராம் ரூ. 9,860க்கும், சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ஒரு சவரன் ரூ.78,880க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை மட்டும் அதிரடியாக கிராமுக்கு ரூ.13 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.190க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.