மதுரையில் சாதிய ஆணவ படுகொலையை கண்டித்து தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் சாதிய ஆணவ படுகொலையை கண்டித்தும், ஆணவ படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற கோரியும், சட்டத்தின் முக்கிய பிரிவு வரையறை செய்து முறைப்படுத்த தனிக்குழு அமைத்து அக்குழுவின் தலைவராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களை நியமிக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செபாஸ்டியன் சூசைராஜ் தலைமை தாங்கினார். தொடர்ந்து சாதிய ஆணவ படுகொலை மிகவும் கண்டிக்கத்தக்கது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.