
இந்த வருடம் தீபாவளி ரிலீசிற்கு மூன்று இளம் தலைமுறை நடிகர்களின் திரைப்படங்கள் போட்டியிடுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை அதிகரித்திருக்கிறது. எந்தெந்த படங்கள்? விரிவாகப் பார்க்கலாம்.
Summary
DUDE
என்னதான் கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகியிருந்தாலும், அடுத்த இரண்டே படங்களின் மூலமாக இளைஞர்களின் ஃபேவரெட் நாயகனாக மாறியவர் தான் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் வெளியான லவ் டுடே, டிராகன் ஆகிய இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தன.

Dude Pradeep Ranganathan
இதனையடுத்து தீபாவளி ரிலீசாக பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ வெளியாக இருக்கிறது. சுதா கொங்கராவின் உதவியாளராக பணியாற்றிய கீர்த்திஸ்வரன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படமாக உருவாகியுள்ளது ‘டியூட்’. பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி, ஹிருது ஹரூண் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
இதன் டிரைலர் வெளியாகிய நிலையில் இது பிரதீப்பிற்கே உண்டான கலகலப்பான கமர்ஷியல் ஸ்டைலில் இருப்பதாக ரசிகர்கள் மிகுந்தம் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.
பைசன்
அதேபோல மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் ‘பைசன்’. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கிராமத்து பின்புலம் கொண்ட ஒரு கபடி வீரனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை எனக் கூறப்படுகிறது. இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Bison Dhruv
இந்த திரைப்படமும் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போதைய தலைமுறை இயக்குநர்களில் மாரி செல்வராஜ் மிகவும் சென்சேஷனலான இயக்குநர் என்பதாலும் துரூவ் விக்ரம் வித்யாசமான தோற்றத்தில் பயங்கரமாக நடமும் ஆடியிருப்பது என்பன போன்ற காரணங்களுக்காக இப்படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
டீசல்
அதேபோல இளம் நடிகர்களில் கவனிக்கத்தக்க நடிகராக மாறியிருக்கும் ஹரீஷ் கல்யாணின் டீசல் படமும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இவரது நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான பார்க்கிங் படம் இவருக்கு பாராட்டுக்களை பெற்றுத் தந்ததுடன் வெற்றிப் படமாகவும் அமைந்தது. இதையடுத்து, கடந்தாண்டு வெளியான லப்பர் பந்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

Diesel Harish Kalyan
இந்த சூழலில் தற்போது டீசல் படம் வெளியாக உள்ளது. வரும் 17ம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின கதேகர், ஜாகிர் உசேன், தங்கதுரை, மாறன், கேபிஒய் தீனா, அபூர்வா சிங் ஆகியோர் நடித்துள்ளனர். வினய் இந்த படத்தில் வில்லனாக காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். தேர்ட் ஐ என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் எஸ்பி சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு எழுந்துள்ளது.
மூன்று இளம் தலைமுறை ஹீரோக்களின் படங்கள் இந்த தீபாவளிக்கு போட்டியிடும் நிலையில் யாருடையது பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் கொடுக்கும் என்னும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் மூன்று படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது