
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளில் லாபம், வருவாய் என அனைத்தும் உயர்வுடன் அறிவித்தாலும் சந்தை கணிப்புகளை எட்டாதது பெரும் சோகம். ஆனால் இதற்கு காரணமாக ஊழியர்கள் பணிநீக்கமும், ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட Serverance pay ஆகியவற்றின் மூலம் ஏற்பட்ட இழப்பு அதைவிட பெரும் சோகத்தை ஐடி ஊழியர்களுக்கு அளித்துதது.
இதை அனைத்தையும் துடைத்தெறியும் வகையில் டிசிஎஸ் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வேரியபிள் பே மற்றும் சம்பள உயர்வு குறித்த அறிவிப்பை ஒரே நேரத்தில் வெளியிட்டு அதன் ஊழியர்களை குஷிப்படுத்தியுள்ளது.
டிசிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின் பிட தனது ஊழியர்களுக்கு செப்டம்பர் காலாண்டுக்கான வேரியபிள் பே தொகை C, C1, மற்றும் C2 நிலைகளில் உள்ள கீழ் நிலை ஊழியர்களுக்கு 100% வழங்கப்படும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதேபோல் C3A மற்றும் அதற்கு மேல் பதவிகளில் இருக்கும் மூத்த நிலை ஊழியர்களான வேரியபிள் பே தொகை கடந்த ஆண்டு விட அதிகமாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.
வேரியபிள் பே மற்றும் சம்பள உயர்வு குறித்து TCS-ன் தலைமை மனிதவள அதிகாரி (CHRO) சுதீப் குண்ணுமல், ஊழியர்களுக்கு அனுப்பிய அனுப்பிய மின்னஞ்சலில், C3A வரையிலான பதவிகளில் உள்ள ஊழியர்களுக்கு செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் வருடாந்திர சம்பள உயர்வு அமல்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். பணியில் உயர்ந்த செயலாற்றல் காட்டியவர்கள் இரட்டை இலக்க சம்பள உயர்வைப் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சுதீப் குண்ணுமல் கூறுகையில், மத்திய மற்றும் மூத்த நிலை ஊழியர்கள் அதாவது C3A மற்றும் அதற்கு மேல் நிலையில் இருக்கும் ஊழியர்களுக்கான காலாண்டு வேரியபிள் பே தொகை கடந்த ஆண்டு விட அதிகமாக இருக்கும் என்று ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேபோல் சம்பள உயர்வை பார்க்கும் போது இப்பிரிவு ஊழியர்களுக்கு அவர்களின் வர்த்தக செயல்திறன், ஊழியரின் தனிப்பட்ட செயல்திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
C, C1, மற்றும் C2 நிலைகளில் உள்ள கீழ் நிலை ஊழியர்கள் பொதுவாக சிறப்பான சம்பள உயர்வு மற்றும் முழு வேரியபிள் பே தொகையை பெறுவார்கள், ஏனெனில் அவர்களது சம்பளம் குறைவான அளவில் இருக்கும். ஆனால் மூத்த நிலையில் இருக்கும் ஊழியர்களின் சம்பளமும் அதிகம், அவர்களின் பொறுப்பும் அதிகம்.
lடிசிஎஸ் ஊழியர்களுக்கு வேரியபிள் பே மற்றும் சம்பள உயர்வு ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளதால் இதை தீபாவளி பரிசு என அழைக்கும் அளவுக்கு உள்ளது.