
இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி-யின் மருமகன், ராஜ்ய சபா உறுப்பினரான சுதா மூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக், பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின்பு அடுத்தடுத்து முக்கிய பதவிகளில் பொறுப்பேற்கிறார்.
முன்னாள் பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக், உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி நிறுவனமான ஆந்த்ராப்பிக் ஆகியவற்றில் மூத்த ஆலோசகராக புதிதாக பணியில் சேர்ந்துள்ளார்.
பிரிட்டன் தேர்தலில் ரிஷி சுனக் தோற்றுப்போன நிலையில், பிரதமர் பதவியில் இருந்து விலகினாலும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து பணியாற்றி வரும் ரிஷி சுனக், அடுத்தடுத்து முக்கியமான நிறுவனங்கள் முக்கிய ஆலோசகராக இணைந்து வருகிறார்.
ரிஷி சுனக், 2022 அக்டோபர் முதல் 2024 ஜூலை வரை இங்கிலாந்தின் பிரதமராக பணியாற்றினார், அதன் பிறகு பொது தேர்தலில் தோற்றுப்போன நிலையில், கான்சர்வேடிவ் கட்சி தலைவராக இருந்து விலகியவர் 2025 ஜூலை மாதம் கோல்ட்மேன் சாசஸ்-ன் மூத்த ஆலோசகராக இணைந்தார்.
இதை தொடர்ந்து இப்போது மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆந்த்ராப்பிக் ஆகியவற்றில் பகுதி நேர ஆலோசகராக பணியாற்றும் பொறுப்பை ஏற்றுள்ளாற் ரிஷி சுனக். இதுக்குறித்து தனது லிங்க்டின் பதிவிட்டுள்ளார் ரிஷி சுனக்.
ACOBA (Advisory Committee on Business Appointments) என்ற அரசு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ரிஷி சுனக் இரு நிறுவனங்களின் மூத்த தலைவர்களுடன் இணைந்து, மாஃக்ரோ-எகானமிக் மற்றும் ஜியோபாலிடிக்கல் போக்குகள், எப்படி தொழில்நுட்பம் மற்றும் சமூகத்துடன் இணைந்து செயல்படுகின்றன என்பது குறித்த ஆலோசகளையும், தனது பார்வைகளை வழங்குவார்.
இதேவேளையில் ரிஷி சுனக் தான் பணியாற்றும் நிறுவனங்களுக்கு பிரிட்டன் கொள்கை குறித்தும் எவ்விதமான ஆலோசனையும் வழங்கமாட்டார். இதேபோல் இந்த நிறுவனத்திற்காக பிரிட்டன் அரசிடமும், அரசு தலைவர்கள், அதிகாரிகளிடமும் தொடர்புகொள்ளமாட்டார் என் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் பிரதமராக இருந்த ஒருவர், கார்ப்ரேட் நிறுவனத்தின் மூத்த ஆலோசகராக இணைந்து பணியாற்றுவது, இதிலும் குறிப்பாக அதிகப்படியான நிறுவனங்களுக்கு ஒரே நேரத்தில் பணியாற்றுவது ரிஷி சுனக் மட்டும் தான்.