
உத்தரப்பிரதேச மாநிலத்தில், ராத்திரியானால் பாம்பாக மாறி தாலி கட்டிய தன் மனைவி உயிர் பயம் காட்டுவதாக கணவன் பரபரப்பு புகாரளித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள லோதாசா கிராமத்தைச் சேர்ந்தவர் மெராஜ். சமீபத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில், கலெக்டரை சந்தித்தவர், பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்து, அங்கிருந்த அதிகாரிகளை அலற விட்டுள்ளார்.
ஐயா! ஐயா! என்னை காப்பாத்துங்க… என்னோட பொண்டாட்டி, ராத்திரி ஆனா நாகினியாய் உருமாறி உஷ்.. உஷ் என சத்தம் போட்டு பயமுறுத்துரா!” என கண்ணில் மரண பீதியுடன் கதறியுள்ளார். “யாருடா இவன்? ஏதோ போதையில் உலறுகிறான் போல” என நினைத்த கலெக்டர் அலுவலக காவலர்கள், அவரை வெளியேற்ற முயன்றனர்.
ஆனால் மெராஜ், “ஐயா நான் சொல்றது நெசம்தான்.. தயவு செஞ்சு என்ன நம்புங்க என அடம்பிடித்துள்ளார். மெராஜ் – அவரது மனைவி நசீமுன் இருவரும் திருமணம் செய்த புதிதில் ஆனந்தமாகத்தான் வாழ்ந்தனர். ஆனால் பல மாதங்கள் கடந்து, இரவு நேரமானால் நசீமுன் பாம்பைப் போலச் சீறிப்பாய்ந்து உஷ்.. உஷ் என சத்தம் போட்டு மெராஜின் தூக்கத்தைக் கெடுத்துள்ளார். ஆழ்ந்த உறக்கத்தில் பாம்பின் சத்தம் காதோரம் கேட்டால் எப்படி இருக்கும்? உயிரே உறைந்து போகும்..
அதில் சில முறை பாம்பாகவே மாறி சீறியதாகவும் மெராஜ் அச்சம் தெரிவித்துள்ளார். தனது மனைவியிடமிருந்து தன்னை பாதுகாக்குமாறு மெராஜ் ஏற்கனவே உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் ; போலீசார் அதற்கு நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலே தற்போது கலெக்டரின் புகாரளித்திருக்க வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். மீராஜின் புகாரைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
அது தொடர்பாக ஊருக்குள் விசாரிக்கையில் மெராஜின் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், பெண்ணின் வீட்டில் அதை மறைத்து திருமணம் செய்து வைத்ததாகவும் கூறியுள்ளனர். மெராஜ் அவரது மனைவியைப் பேயோட்டப் பல முறை அழைத்துச் சென்றதாகவும், அது தொடர்பாகப் பெண் வீட்டார் புகாரளித்து மஹ்முதாபாத் காவல் நிலையத்தில் ஒரு பஞ்சாயத்து நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
இதற்கிடையே நசீமுன் பாம்பை போல அச்சுறுத்துவதாக, மெராஜ் புகாரளித்தது அதிர்ச்சி அளித்திருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளார். மெராஜின் மனைவி நாகினியா? இல்லை அவர் வேண்டுமென்றே மனைவி மீது பழிசுமத்துகிறாரா ?என்பது விசாரணையின் முடிவிலேயே தெரியவரும்.