
Summary
தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இன்று (அக்டோபர் 1) சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.87,120 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.10,890 ஆகவும், 24 காரட் தங்கம் ரூ.11,880 ஆகவும் உள்ளது. இனி விலை குறைய வாய்ப்பில்லை என கூறப்படுவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி உள்ளது. இந்த தொடர் விலை உயர்வு முதலீட்டாளர்களையும் பொதுமக்களையும் பெரும் கவலையடையச் செய்துள்ளது.

தங்கத்தின் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அதாவது கடந்த 20 ஆண்டுகளில் தங்கம் 1,200 சதவிகிதம் வருமானம் கொடுத்துள்ளது. 2025ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து சவரனுக்கு ரூ.30,000த்துக்கு மேல் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,000த்தை நெருங்கி வருகிறது. இதன் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. தங்கத்தின் விலை மட்டும் இல்லாமல் வெள்ளியின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. அக்டோபர் 1ம் தேதியான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது.
22 காரட் தங்கத்தின் விலை நிலவரம்
ஆபரணம் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.10,890 ஆக உள்ளது. 1 பவுன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ. 87,120 என்ற நிலையில் உள்ளது.
24 காரட் தங்கத்தின் விலை நிலவரம்
முதலீட்டு நோக்கில் வாங்கப்படும் தங்கமான 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.11,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 95,040 என்ற நிலையில் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் வெள்ளியின் விலை மாற்றம் இல்லாமல் உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.161 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,61,000 என்ற நிலையில் விற்பனை செய்யப்படுகிறது.