2024ஆம் ஆண்டில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பாக 12.4 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இது குறித்து இன்ஃபோ கிராஃபிக்ஸைப் பார்க்கலாம்.
மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத்தில்தான் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பாக இந்தியாவிலேயே அதிக வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. 3.5 லட்சம் வழக்குகளுடன் குஜராத் முதல் இடத்தில் இருக்கிறது. 1.8 லட்சம் வழக்குகளுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மூன்றாம் இடத்தில் இருக்கும் மஹாராஷ்டிராவில் 1.3 லட்சம் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. 1.1 லட்சம் வழக்குகளுடன் மத்திய பிரதேசமும் கேரளமும் 4ஆம் இடத்தில் இருக்கின்றன.

போதைப்பொருள் பயன்பாடு
உத்தர பிரதேசமும் மதுவிலக்கு அமலில் உள்ள பிஹாரும் 0.7 லட்சம் வழக்குகளுடன் 5ஆம் இடத்தில் இருக்கின்றன. 0. 4 லட்சம் வழக்குகளுடன் ஒடிஷா ஆறாவது இடத்தில் இருக்கிறது. ஆந்திராவும் சத்தீஸ்கரும் 0.3 லட்சம் வழக்குகளுடன் ஏழாவது இடத்தில் இருக்கின்றன.
