இப்படத்தின் டீசர் மே 19ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பெவிலியனில் திரையிடப்பட்டுள்ளது.
ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் நடிப்பில் பரணி சேகரன் இயக்கியுள்ள படம் `தாழ் திறவா’. ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் இப்படத்தில் சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, ஷ்யாம் பிரசாத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் குழந்தை நட்சத்திரங்களான லிஷா மற்றும் லலித் ஆகியோரும் முக்கியப் கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.
ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படும் பழமையான எழுத்துகள் மற்றும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மமான ஆபத்துகளே இப்படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது. தமிழில் அகழ்வாராய்ச்சியை மையமாகக் கொண்டு, அதனுடன் ஹாரர் மற்றும் அமானுஷ்ய அம்சங்களை இணைத்து இப்படம் உருவாகியுள்ளதாம். இப்படத்தின் டீசர் மே 19ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பெவிலியனில் திரையிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.
