விஜய் – அஜித் நடித்து வெளியான மங்காத்தா – தெறி படங்கள் ஜனவரி 23ம் தேதி ரீரிலீஸ் ஆகிறது. ரீ ரிலீஸ் இருக்கட்டும், இதற்கு முன் ஒரே நாளில் வெளியான விஜய் – அஜித் படங்கள் என்னென்ன தெரியுமா…

1. வான்மதி vs கோயம்புத்தூர் மாப்பிள்ளை – 1996

Coimbatore Mappillai, Vaanmathi
இரு நடிகர்களின் ஆரம்பகட்ட படங்கள் இரண்டும் நல்ல வெற்றியை பெற்றன.
2. கல்லூரி வாசல் vs பூவே உனக்காக – 1996

Poove Unakkaaga
`கல்லூரிவாசல்’ படத்தின் ஹீரோ பிரசாந்த், ஆனால் அதில் அஜித்தும் நடித்தார் என்பதற்காகசேர்க்கப்பட்டுள்ளது . ஹிட் எனப் பார்த்தால் விஜயின் `பூவே உனக்காக’ தான் மெகா ஹிட்.
3. நேசம் vs காலமெல்லாம் காத்திருப்பேன் – 1997

Kaalamellam Kaathiruppen
இரு படங்களுமே பெரிய வெற்றியடையவில்லை.
4. ரெட்டை ஜடை வயசு vs காதலுக்கு மரியாதை – 1997

Kadhalukku Mariyadhai
விஜயின் `காதலுக்கு மரியாதை’ ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது, ஆனால் அஜித்தின் `ரெட்டை ஜாடை வயசு’ அமைந்தது.
5. உன்னைத்தேடி vs துள்ளாத மனமும் துள்ளும் – 1999

Thullatha Manamum Thullum
அஜித் – சுந்தர் சி கூட்டணியின் `உன்னைத்தேடி’ ஆவரேஜ் ஹிட், ஆனால் விஜயின் `துள்ளாத மனமும் துள்ளும்’ மெகாஹிட்டானது.
6. உன்னைக்கொடு என்னைத்தருவேன் vs குஷி – 2000

Kushi
அஜித்தின் `உன்னைக்கொடு என்னைத்தருவேன்’ பெரிய வெற்றி இல்லை, ஆனால் `குஷி’ மிகப்பெரிய ஹிட்.
7. தீனா vs ப்ரெண்ட்ஸ் – 2001

Dheena
இரு படங்களுமே மிகப்பெரிய வெற்றியடைந்தது
8. வில்லன் vs பகவதி (Vijay) – 2002

Villain
அஜித்தின் `வில்லன்’ பெரிய ஹிட், விஜயின் `பகவதி’ ஆவரேஜ் வெற்றி.
9. ஆஞ்சநேயா vs திருமலை – 2003

Thirumalai
அஜித்தின் `ஆஞ்சநேயா’ பெரிய தோல்வி, விஜயின் `திருமலை’ ஹிட்டானதோடு, அவரை ஆக்ஷன் நடிகராகவும் மாற்றியது.
10. பரமசிவன் vs ஆதி – 2006

Aathi
இரண்டு படங்களுமே மிகப்பெரிய தோல்வி
11. ஆழ்வார் vs போக்கிரி – 2007

Pokkiri
`ஆழ்வார்’ மிகப்பெரிய தோல்வி, அதற்கு அப்படியே நேரெதிராக `போக்கிரி’ மாபெரும் வெற்றி
12. வீரம் vs ஜில்லா – 2014

Jilla
`வீரம்’ பெரிய ஹிட், `ஜில்லா’ ஆவரேஜ் ஹிட்
13. துணிவு vs வாரிசு 2023

Varisu
`துணிவு’ ஆவரேஜ் ஹிட்டாகவும், `வாரிசு’ ஹிட்டாகவும் அமைந்தது.
