இந்தியா – சீனா நேரடி விமான சேவை
இந்தியாவுக்கும் சீனப் பெருநிலப் பகுதிக்கும் இடையே 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி விமானப் போக்குவரத்து, இரு நாடுகளின் உறவைச் சீரமைக்கும் நோக்கில் நேற்று முதல் மீண்டும் தொடங்கியது..
கொரோனா பரவல் எதிரொலியாக கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியா – சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், லடாக் எல்லைப் பிரச்னை காரணமாக நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில் இன்டிகோ விமானம் நேற்று சீனாவுக்கு சென்றது.. இது குறித்து விரிவாக பார்க்கலாம்..
இந்தியாவுக்கும் சீனப் பெருநிலப் பகுதிக்கும் இடையே 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி விமானப் போக்குவரத்து, இரு நாடுகளின் உறவைச் சீரமைக்கும் நோக்கில் நேற்று முதல் மீண்டும் தொடங்கியது..

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இன்டிகோ ஏர்லைன்ஸ்தான் இந்தச் சேவையை மீண்டும் தொடங்கிய முதல் நிறுவனம் ஆகும். நேற்று இரவு 10 மணிக்கு இன்டிகோவின் கொல்கத்தா – குவாங்சூ இடையேயான விமானம் புறப்பட்டுச் சென்றது. இது இரு நாடுகளுக்கு இடையேயான விமானப் போக்குவரத்து அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கப்படுவதைக் குறிக்கிறது
கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் 2020 இல் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட எல்லை மோதல்களைத் தொடர்ந்து இந்த விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது இந்தச் சேவை மீண்டும் தொடங்கப்படுவது, இரு நாடுகளின் உறவுகளில் “படிப்படியாக இயல்பு நிலையை” ஏற்படுத்தும் ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது.
இந்த நேரடி விமானப் போக்குவரத்து வர்த்தகப் பயணிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துத் துறைக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்து, வணிகம் மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்டிகோ நிறுவனம், நவம்பர் 10 முதல் டெல்லி – குவாங்சூ இடையே தினசரி நேரடி விமானங்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும், சீனாவைச் சேர்ந்த சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நவம்பர் 9 ஆம் தேதி முதல் ஷாங்காய் – டெல்லி இடையே விமானங்களை மீண்டும் தொடங்க உள்ளது.

5 ஆண்டுகால முடக்கத்திற்குப் பிறகு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படுவது, ஆசியாவின் இந்த இரு பெரும் சக்திகளும் எச்சரிக்கையுடன் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையாக உள்ளது.
