படத்தில் ஒரு மர்மான பாத்திரமாக வந்த மாயக்கார பாத்திரம் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. இந்த வேடத்தில் நடித்தது யார் என்ற கேள்வி அப்போது எழுந்தது.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த படம் `காந்தாரா சாப்டர் 1′. அக்டோபர் 2ம் தேதி வெளியான இப்படம் 2 வாரங்களில் 717.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னடத்தில் உருவாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. தமிழில் ரிஷப் ஷெட்டிக்கு நடிகர் மணிகண்டன் டப்பிங் குரல் கொடுத்திருந்தார். மேலும் இப்படத்தின் ஆங்கில பாதிப்பு அக்டோபர் 31ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் பெர்மே என்ற பாத்திரத்தில் ரிஷப் ஷெட்டி நடித்திருந்தார். மேலும் படத்தில் ஒரு மர்மான பாத்திரமாக வந்த மாயக்கார பாத்திரம் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. இந்த வேடத்தில் நடித்தது யார் என்ற கேள்வி அப்போது எழுந்தது. இப்போது அதனை வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே.
அந்த பாத்திரத்தில் ஹீரோ ரிஷப் ஷெட்டியே நடித்திருக்கிறார். அதில் நடிப்பதற்காக கிட்டத்தட்ட 6 மணிநேரம் மேக் அப் செய்து அந்தப் பாத்திரத்தில் தோன்றி இருக்கிறார். படம் வெளியாகி 25 நாட்கள் கடந்ததையொட்டி இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள் ஹொம்பாலே. இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
