
நேற்று நடைபெற்ற 5வது லீக் போட்டியிலும் மழை குறுக்கிட்டதால் இலங்கை அணி ஒரு வெற்றிகூட இல்லாமல் பரிதாபமாக தொடர்ந்துவருகிறது.
Summary
நேற்று நடைபெற்ற 5வது லீக் போட்டியிலும் மழை குறுக்கிட்டதால் இலங்கை அணி ஒரு வெற்றிகூட இல்லாமல் பரிதாபமாக தொடர்ந்துவருகிறது.
8 அணிகள் பங்கேற்றுள்ள 2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை மற்றும் இந்தியாவில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரையிறுதிக்கான தகுதியை பொறுத்தவரை, ஒரு அணி மற்ற 7 அணிகளுடன் ஒருமுறை மோதும், இதில் அதிக வெற்றிகள் பெற்று டாப் 4-ல் இடம்பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

2025 மகளிர் உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதிபெற்றது ஆஸ்திரேலியா
இந்தசூழலில் 4 போட்டியில் வென்றிருக்கும் ஆஸ்திரேலியா அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தும், 3வது இடத்தில் தென்னாப்பிரிக்காவும், 4வது இடத்தில் இந்தியாவும் நீடிக்கின்றன.
மழையால் தொடரும் பரிதாபம்..
சொந்த மண்ணில் கொழும்புவில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியிருக்கும் இலங்கை அணிக்கு, 3 முறை மழை வில்லனாக மாறி போட்டியில் குளறுபடியை ஏற்படுத்தியது. இரண்டு போட்டிகள் ரத்துசெய்யப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் பாதகமான சூழலை மழை ஏற்படுத்தியது.

இலங்கை மகளிர் அணி
நேற்று கொழும்புவில் நடக்கவிருந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. 46/2 நிலையில் இருந்த இலங்கை அணி 20 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்து 105 ரன்கள் மட்டுமே அடித்தது. பின்னர் பேட்டிங்கிற்கு சாதகமாக பிட்ச் மாற விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டிய தென்னாப்பிரிக்கா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.
5 போட்டிகள் முடிவில் 2 புள்ளிகளுடன் கடைசி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது இலங்கை அணி. இந்தியாவில் நடைபெற்ற இலங்கை போட்டியிலும் மழை குறுக்கிட்டு ஆட்டத்தை மாற்றியது குறிப்பிடத்தக்கது. சொந்த மணில் தொடர் நடக்கும்போதும், அதை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் இலங்கை அணி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.