
இந்த வாரம் ஓடிடி மற்றும் தியேட்டர்களில் பல்வேறு மொழிகளில் பல சுவாரஸ்யமான படங்கள் மற்றும் சீரிஸ் வெளியாகின்றன. விதார்த் நடித்துள்ள `மருதம்’ முதல் Dwayne Johnson நடித்துள்ள `The Smashing Machine’ வரை பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.
1. Series: Boots (English) Netflix – Oct 9

Boots Peter Hoar
Peter Hoar இயக்கியுள்ள சீரிஸ் `Boots’. வற்புறுத்தலின் பேரில் ராணுவத்தில் சேரும் ஒருவன், தன்னைப் பற்றி புரிந்து கொள்வதே கதை.
2. Kurukshetra (Hindi) Netflix – Oct 10

Kurukshetra Ujaan Ganguly
Ujaan Ganguly இயக்கியுள்ள சீரிஸ் `Kurukshetra’. குருக்ஷேத்திர போரின் 18 நாட்களை 18 வீரர்களின் பார்வையில் இருந்து சொல்லும் கதை.
3. Search: The Naina Murder Case (Hindi) Jio Hotstar – Oct 9

Search: The Naina Murder Case Konkana Sen
Rohan Sippy இயக்கத்தில் கொங்கனா சென் ஷர்மா நடித்துள்ள சீரிஸ் `Search: The Naina Murder Case’. அரசியல்வாதி காரில் ஒரு பெண்ணின் சடலம் கிடைக்கிறது, அந்தக் கொலையை செய்தது யார் என்ற விசாரணையே கதை.
4. OTT: The Woman in Cabin 10 (English) Netflix – Oct 9

OTT The Woman in Cabin 10 Simon Stone
Simon Stone இயக்கத்தில் Keira Knightley நடித்துள்ள படம் `The Woman in Cabin 10′. சொகுசு கப்பல் ஒன்றில் எழுத்தாளர் ஒருவர் தெரிந்து கொள்ளும் ரகசியமும், அதைத் தொடர்ந்து நடக்கும் விஷயங்களுமே கதை.
5. A Match (Marati) Zee5 – Oct 10

A Match Jayant Digambar
ஜெயந்த் திகம்பர் இயக்கியுள்ள படம் `A Match’. திருமண சந்தையில் ஒரு பெண் சந்திக்கும் விஷயங்களை சுற்று நகர்கிறது இப்படம்.
6. Post Theatrical Digital Streaming: War 2 (Hindi) Netflix – Oct 9

War 2 Ayan Mukerji
அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என் டி ஆர் நடித்த படம் `War 2′. ஏஜெண்டுக்கும் அவரை அழிக்க வருபவனுக்குமான போராட்டமே கதை.
7. Bomb (Tamil) Aha – Oct 10

Bomb Arjun Dass
விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா நடித்த படம் `பாம்’. ஊருக்குள் நிகழும் ஒரு இறப்பும், அதை தொடர்ந்து நடக்கும் பிரச்சனைகளும் தான் கதை.
8. Tribanadhari Barbarik (Telugu) SunNXT – Oct 10

Tribanadhari Barbarik Sathyaraj
சத்யராஜ் நடித்த படம் `Tribanadhari Barbarik’. பழமையான போராளி ஒருவன் நிகழ்காலத்துக்கு வந்த பின் என்ன நடக்கிறது என்பதே கதை.
9. Mirai (Telugu) Jio Hotstar – Oct 10

Mirai Teja Sajja
கார்த்திக் கட்டம்னேனி இயக்கிய படம் `Mirai’. அரக்கனை அழிக்க கிளம்பும் ஒரு இளைஞனின் கதை.
10. Theatre: Marutham (Tamil) – Oct 10

Marutham Vidharth
கஜேந்திரன் இயக்கத்தில் விதார்த்த நடித்துள்ள படம் `மருதம்’. கடன் தொல்லையால் அவதிப்படும் ஒரு விவசாயியின் கதை.
11. Kayilan (Tamil) – Oct 10

Kayilan Ramya Pandiyan
அருள் அஜித் இயக்கத்தில் ரம்யா பாண்டியன், ஷிவதா நடித்துள்ள படம் `கயிலன்’. பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது.
12. Irudhi Muyarchi (Tamil) – Oct 10

Irudhi Muyarchi Ranjith
வெங்கட் இயக்கத்தில் ரஞ்சித் நடித்துள்ள படம் `இறுதி முயற்சி’. கடன் தொல்லையில் இருந்து தப்ப நினைக்கும் ஹீரோவின் கதை.
13. Will (Tamil) – Oct 10

Will Sonia Aggarwal
சிவராமன் இயக்கத்தில் விக்ராந்த், சோனியா அகர்வால் நடித்துள்ள படம் `வில்’. சொத்து பிரச்சனையை மையப்படுத்திய கதை.
14. Constable (Telugu) – Oct 10

Constable Aaryan
ஆர்யன் இயக்கியுள்ள படம் `Constable’. காசி புதிதாகா செல்லும் மோகிலா பகுதியில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிப்பதே கதை.
15. Avihitham (Malayalam) – Oct 10

Avihitham Senna Hegde
சென்னா ஹெக்டே இயக்கியுள்ள படம் `Avihitham’. ஆணாதிக்க கிராமம் ஒன்றில், பிறரின் உறவுகள் பற்றி புறணி பேசும் இளைஞர்கள் பற்றியும் அதைப் பற்றிய சமூக பார்வையையும் பகடியாக சொல்லும் கதை.
16. Tron : Aries (English) – Oct 10

Tron Aries Joachim Rønning
Joachim Rønning இயக்கியுள்ள படம் `Tron: Ares’. 2010ல் வெளியான `Tron: Legacy’ படத்தின் சீக்குவலாக உருவாகியுள்ளது. புத்திசாலித்தனமான Ares என்ற புரோக்ராம் நிஜ உலகத்திற்கு வருகிறது. அதன் பின் நடப்பவையே கதை.
17. Lord Curzon Ki Havdi (Hindi) – Oct 10

Lord Curzon Ki Havdi Anshuman Jha
Anshuman Jha இயக்கியுள்ள படம் `Lord Curzon Ki Havdi’. நான்கு புலம்பெயர் இந்தியர்கள், லண்டனில் ஒரு பார்ட்டியில் சந்தித்து கொள்கிறார்கள். பார்ட்டியின் இறுதியில் அவர்களின் வாகனத்தில் ஒரு பிணம் கிடக்கிறது. அதன் பின் என்ன என்பதே கதை.
18. The Smashing Machine (English) – Oct10

The Smashing Machine Dwayne Johnson
Benny Safdie இயக்கத்தில் Dwayne Johnson, Emily Blunt நடித்துள்ள படம் `The Smashing Machine’. Mark Kerr என்ற மல்யுத்த வீரரின் பயோபிக்காக உருவாகியுள்ளது படம்.