
சமூக ஊடக தளமான ரெடிட்டில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளியாகியுள்ளது. ஒரு ரயிலின் கழிவறை கிட்டத்தட் 6 மணி நேரம் பூட்டி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமூக ஊடக தளமான ரெடிட்டில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளியாகியுள்ளது. 6 மணி நேரம் ரயிலின் கழிப்பறை பூட்டி இருந்ததால் ரயில்வே ஊழியர்கள் கதவை உடைக்க முயற்சி செய்தனர். ஆனால் அதன்பின் அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

சம்பவத்தின் போது, ரயிலில் இருந்தவர்கள் நீண்ட நேரம் கதவைத் தட்டினர், ஆனால் உள்ளே இருந்த அந்த நபர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இறுதியில், கதவை உடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு அவர் கழிப்பறையில் இருந்து வெளியே வந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தகவல்களின்படி, இந்த சம்பவம் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்ததாகவும், பயணிகள் நீண்ட நேரமாக கழிப்பறை கதவு மூடப்பட்டிருப்பதை கவனித்ததாகவும் கூறப்படுகிறது. உள்ளே இருந்து யாரும் பதிலளிக்காததால், பயணிகள் மற்றும் ஊழியர்கள் ஏதோ தவறு நடந்திருக்கலாம் என்று சந்தேகித்தனர். இதனையடுத்து பயணிகள் ரயில்வே ஊழியர்களிடம் புகார் அளித்தனர். புகாரையடுத்து ரயில்வே ஊழியர்கள் கதவை உடைக்க முடிவு செய்தனர்.

இந்த சம்பவத்தின் வீடியோவானது ரெடிட்டில் r/IndianRailways என்ற கணக்கில் இருந்து பதிவிடப்பட்டது. பதிவிடப்பட்ட இந்த வீடியோ, வேகமாக வைரலானது. அந்த வீடியோவில், ஒரு ரயில்வே ஊழியர் மூடியிருந்த கழிப்பறை கதவை உடைத்து திறக்க முயற்சிப்பதைக் காணலாம். ரயில்வே அதிகாரிகளும், கேட்டரிங் ஊழியர்களும் முதலில் கதவைத் தள்ளித் திறக்க முயன்றனர், ஆனால் பலனளிக்கவில்லை. பின்னர் அவர்கள் ஒரு ஸ்க்ரூடிரைவர் மற்றும் சுத்தியை பயன்படுத்தி, பூட்டைத் திறக்க முயன்றனர்.

கழிப்பறை கதவு உடைக்கப்பட்டவுடன், குடிபோதையில் இருந்த ஒரு நபர் தடுமாறி வெளியே வருவதைக் காணலாம். இது ரயில்வே ஊழியர்களையும், பயணிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிலர் இந்தக் காட்சியைப் பார்த்து சிரித்தனர், மற்றவர்கள் அவரது செயல்களால் கோபமடைந்தனர். அவர் வெளியே வந்த பிறகு, அங்கிருந்தவர்கள் அவரை புகைப்படங்களை எடுத்து விசாரித்தனர். இந்த சம்பவம் ரயிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த முழு சம்பவத்தையும் ஒரு பயணி படம் பிடித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டார். சமூக ஊடகங்களில் இந்த வீடியோ விரைவாக வைரலானதை அடுத்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் பயணி குடிபோதையில் கழிப்பறையில் தூங்கியிருக்கலாம் என்று கூறுகின்றனர், மற்றவர்கள் டிக்கெட் பரிசோதகரைத் தவிர்ப்பதற்காக அவர் மணிக்கணக்கில் மறைந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
