
இந்த புதிய நடைமுறை மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், கட்டண வசூல் முறையின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பாஸ்டேக் இல்லாத வாகன ஓட்டிகள் யுபிஐ (UPI) வசதியை பயன்படுத்தினால், வழக்கமான கட்டணத்தில் 1.25 மடங்கு செலுத்தினால் போதும் என மத்திய சாலை போக்குவரத்து, மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதும், கட்டண வசூல் முறையை மேம்படுத்துவதும், பயணிகளை எளிதில் சேவை செய்வதுமாகும்.

நாடு முழுவதும் உள்ள 1,150 தேசிய நெடுஞ்சாலை மற்றும் விரைவு சாலைகளில் பாஸ்டேக் வருடாந்திர பாஸ் வசதி மூலம் தடையின்றி பயணம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த சுதந்திர தினத்தில் மட்டும் 1.40 லட்சம் வாகன ஓட்டிகள் இந்த வருடாந்திர பாஸ் வாங்கியதாக அதிகாரிகள் கூறினர். இந்த நடவடிக்கை வாகன ஓட்டிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.