
சுகன்யா சம்ரித்தி யோஜனா எனும் இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும்.

ஒவ்வொரு பெற்றோரின் கனவும், தங்கள் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைக்க வேண்டும், கல்வி, திருமணம் போன்ற முக்கியமான விஷயங்களில் எந்த நிதிச் சிக்கல்களையும் சந்திக்கக் கூடாது என்பதுதான். குறிப்பாக, நம் நாட்டில் பல பெற்றோர்கள், எப்போதும் தங்கள் மகள்களின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுகிறார்கள். ஆனால், நீங்கள் இப்போதே ஒரு சிறந்த முடிவை எடுக்க முடியும்.

உங்கள் மகளின் எதிர்காலத்தை நிதி ரீதியாகப் பாதுகாப்பாக மாற்ற மத்திய அரசு வழங்கும் ஒரு அற்புதமான திட்டம் தான் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் (சுகன்யா சம்ரிதி யோஜனா) ஆகும். இந்த திட்டம் இந்தாண்டு 10வது ஆண்டில் நுழைகிறது. அந்த வகையில், செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் ஒரு குடும்பம் எத்தனை கணக்குகளைத் திறக்கலாம் என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா எனும் இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும். பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை ஈடுசெய்யும் இந்த திட்டம், 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயதாகும் வரை எந்த நேரத்திலும் அந்தப் பெண் குழந்தையின் பெயரில் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரால் கணக்கை தொடங்க முடியும். இந்தத் திட்டத்தில் 8.2 சதவீத வட்டி விகிதம் பெற முடியும். PIB வெளியீட்டின்படி, நவம்பர் 2024 நிலவரப்படி, இந்தியா முழுவதும் 4.1 கோடிக்கும் மேற்பட்ட செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இது இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை காட்டுகிறது.
இந்தத் திட்டத்தில் வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.250 வைப்புத்தொகை முதல் அதிகபட்ச வரம்பு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் ஆகும். ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ஒரு கணக்கு மட்டுமே திறக்க முடியும். பெற்றோர்களைத் தவிர வேறு யாரேனும் கூடுதல் கணக்குகளைத் திறந்தால், அவை மூடப்படும்.

தபால் நிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் நீங்கள் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை திறக்கலாம். இவற்றில் SBI, HDFC வங்கி மற்றும் ICICI வங்கி போன்ற முன்னணி நிறுவனங்கள் அடங்கும். இந்த அமைப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வசதியை வழங்குகிறது. செல்வ மகள் சேமிப்புத் திட்டம் திறக்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்டது. பெண் உயர் கல்விக்குத் தேவைப்படும்போது பணத்தை எடுக்கலாம். 18 வயது முடிந்த பிறகு திருமணம் செய்து கொண்டால், கணக்கை முன்கூட்டியே மூடலாம்.