
பாமக எனும் கட்சி தனி மனித உழைப்பினால் 96 ஆராயிரம் கிராமங்களுக்கு சென்று காடுமேடு அலைந்து திரிந்து வியர்வை சிந்தி உருவாக்கினேன் என அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.
Summary
அன்புமணி தனிகட்சி ஆரம்பித்து கொள்ள வேண்டும் அது அன்புமணிக்கும் நல்லது அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. புதிய கட்சி தொடங்கினால் பொறுப்புகள் தான் கிடைக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி கிடைக்காது மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, உடல் பரிசோதனைக்காகவே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சென்று தான் சேர்ந்ததாகவும், அப்போது எந்த குறையும் இல்லை என கூறி மருத்துவர்கள் அனுப்பி வைத்தார்கள் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது தான் ஐ சியூவில் இல்லை ஐ சியூ வார்டுக்கும் போகவில்லை என்று கூறிய அவர், புதியதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சியை தவிர எல்லா கட்சியினரும் தன்னிடம் உடல் நலம் குறித்து விசாரித்தனர். கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறியது மகிழ்ச்சியாக இருந்தது எனத் தெரிவித்தார்.

’அய்யாவிற்கு எதாவது ஆகிவிட்டது என்றால் சும்மா விடமாட்டேன்; வேடிக்கை பார்க்க மாட்டேன் அய்யாவை வைத்து டிராமா பண்னிட்டு இருக்கிறார்கள்’ என அன்புமணி ராமதாஸ் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த ராமதாஸ், ”படிக்காத மாடு மேய்க்கும் சிறுவர்கள் கூட இப்படிபட்ட சொற்களை பேசியிருக்க மாட்டார்கள். அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என ஏற்கனவே கூறியிருக்கிறேன். அன்புமணியின் இந்தப் பேச்சின் மூலம் அது இப்போதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தார். தொடர்ந்து, தொற்று ஆகுற அளவிற்கு எனக்கு வியாதி இல்லை என தெரிவித்தார்.
பாமக எனும் கட்சி தனி மனித உழைப்பினால் 96 ஆராயிரம் கிராமங்களுக்கு சென்று காடுமேடு அலைந்து திரிந்து வியர்வை சிந்தி உருவாக்கினேன். அந்த கட்சியை என்னுடைய கட்சி என அன்புமணி கூற கூடாது. தேர்தல் ஆணையத்தில் சந்திப்போம், கட்சி ஆரம்பிக்கும் போது இப்படி எல்லாம் நடக்கும் என தனக்கு தெரியாது. பாமக கட்சிக்கும் கொடிக்கும் அன்புமணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

ramadoss and anbumani
“அன்புமணி தனிகட்சி ஆரம்பித்து கொள்ள வேண்டும் அது அன்புமணிக்கும் நல்லது அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. புதிய கட்சி தொடங்கினால் பொறுப்புகள் தான் கிடைக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி கிடைக்காது, மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். மேலும் அது ஒரு போலியான அமைப்பாக தான் இருக்கும்” எனக் கூறினார்.
பாமக கட்சி கொடி கட்சி பெயரை அன்புமணி பயன்படுத்த கூடாது. மேலும், தன்னுடைய பெயரின் தலைப்பெழுத்தினை மட்டுமே அன்புமணி பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், டிசம்பர் 30-ல் பாமகவின் பொதுக்குழு கூடும் அதில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் இந்த முறை கூட்டணி முடிவு சரியாக இருக்கும் எனவும் செய்தியாளர் சந்திப்பில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியிருக்கிறார்.