
தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் நாள் மற்றும் விநியோகம் செய்யப்படும் பகுதி குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் விளம்பரம் செய்யப்படும்.

தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலமாக முதியோர் நலன் காக்கும் வகையில் அவர்களுக்கு ரேஷன் பொருள்களை வீடு தேடி சென்று வழங்க முடிவெடுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கும் நேரடியாக சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி ரேஷன் பொருள்கள் வாங்க வேண்டிய சூழல் தற்போது இல்லை. அதுமட்டுமல்லாமல் வேறு யாருடைய உதவியின் மூலமே ரேஷன் கடைகளுக்கு முதியவர்கள் சென்று வர் வேண்டியிருந்தது. இந்த திட்டத்தின் மூலம் அவர்களுக்கு இல்லம் தேடியே அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அரசின் அனைத்து ரேஷன் பொருள்களும் சென்றுவிடுகின்றன.

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதிர்ந்தவர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் இந்த மாதம் 5, 6, 7ம் தேதி குடிமைப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் நாள் மற்றும் விநியோகம் செய்யப்படும் பகுதி குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் விளம்பரம் செய்யப்படும். தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர் அனைவரும் இல்லத்திற்கே வரும் அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயனடையலாம் என கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.