
கிளியரிங் மையம் காசோலையின் படத்தை பணம் செலுத்தும் வங்கிக்கு அனுப்ப வேண்டும். பணத்தை வழங்கும் வங்கி, காசோலைக்கு பணத்தை வழங்கலாமா அல்லது கூடாதா என்ற உறுதிப்படுத்துதலை அன்றைய தினமே வழங்க வேண்டும் என்று ஆர்.பி.ஐ. அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள வங்கிகளில், காசோலைகளை அன்றைய தினமே கிளியர் செய்து, பணத்தை வாடிக்கையாளர் கணக்கில் இருப்பு வைக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.
காசோலைகள் மூலம் பணம் செலுத்துவதை விரைவானதாகவும் எளிமையானதாகவும் மாற்ற மத்திய ரிசர்வ் வங்கி புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை காசோலைகளுக்கு பணம் வழங்கும் பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, காசோலையைப் பெற்ற வங்கி, அதனை ஸ்கேன் செய்து கிளியரிங் மையத்துக்கு அனுப்பும்.

அதன் பின்னர், கிளியரிங் மையம் காசோலையின் படத்தை பணம் செலுத்தும் வங்கிக்கு அனுப்ப வேண்டும். பணத்தை வழங்கும் வங்கி, காசோலைக்கு பணத்தை வழங்கலாமா அல்லது கூடாதா என்ற உறுதிப்படுத்துதலை அன்றைய தினமே வழங்க வேண்டும் என்று ஆர்.பி.ஐ. அறிவுறுத்தியுள்ளது.
