
அமெரிக்காவில் குடியுரிமை பெற வேண்டும் என்றால் இந்தத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். அதற்காக, அமெரிக்கா 128 கேள்வி, பதில்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக நிரந்தரமாக வசிப்பவர்கள் (Green Card Holders) இயல்புரிமை
(Naturalization) மூலம் அமெரிக்கக் குடியுரிமை பெற யு.எஸ்.சி.ஐ.எஸ் (USCIS)-ன் மாற்றியமைக்கப்பட்ட 2025 குடிமையியல் தேர்வை முடிக்க வேண்டும்.
அக்டோபர் 20, 2025 முதல், குடியுரிமை கோரி படிவம் N-400 (இயல்புரிமைக்கான விண்ணப்பம்) தாக்கல் செய்யும் அனைத்து விண்ணப்பதாரர்களும், பழைய 2008 குடிமையியல் தேர்வுப் பதிப்பிற்குப் பதிலாக, புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட 2025 குடியுரிமைத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.