8 மணி நேரம் மட்டும் போதாது, உடலின் இயற்கை கடிகாரத்துக்கு ஏற்ற நேரத்தில் தூங்கினால்தான் முழு பலன் கிடைக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
Summary
மருத்துவர்கள் எச்சரிப்பதாவது, 8 மணி நேரம் தூங்கினாலும், தூக்க நேரம் உடலின் இயற்கை கடிகாரத்துடன் ஒத்துப்போவது அவசியம். இரவு 2 மணி முதல் காலை 10 மணி வரை தூங்கும் பழக்கம், பசி, வளர்ச்சிதை மாற்றம், ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுத்தி, அதிக பசி, சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை உருவாக்கக்கூடும் என அவர்கள் கூறுகின்றனர்.
ஒருவர் 8 மணி நேரம் தூங்கினாலும், அவர் எப்போது தூங்குகிறார் என்பதும் முக்கியம் என, மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். இரவு 2 மணியிலிருந்து காலை 10 மணி வரை தூங்குவதை, பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இப்படி 8 மணி நேரம் தூங்கினாலும், இது முழுமையான பலனை தராமல் போகலாம் என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உறக்கம்
உடலில் இயற்கையான கடிகாரம் ஒன்று இருப்பதாக குறிப்பிடும் அவர்கள், அதனுடன் நமது தூங்கும் நேரம் ஒத்துப்போக வேண்டும் என்கின்றனர். தொடர்ந்து மிகவும் தாமதமாகத் தூங்குவது, பசி, வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும், இதனால், அதிக பசி, சோர்வு, மன அழுத்தம் போன்றவை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கின்றனர். இருப்பினும், அதிகாலை 2 மணி முதல் W காலை 10 மணி வரை இடையூறின்றி தூங்கி புத்துணர்வுடன் எழுந்தால், அது போதுமானதாகக்கூட இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
